கடந்த 5 வருடங்களாக உலகின் சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கான காரணங்களை பின்லாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
01. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதில்லை. தங்கள் சந்தோஷத்தைப் பற்றி பெருமையடிப்பதில்லை
பின்லாந்து மக்கள் இதனை மனதளவில் ஏற்று செயற்படுகின்றார்கள். தங்களுக்கு எது பிடிக்குமோ அல்லது தங்களுக்கு எது சந்தோசத்தைக் கொடுக்குமோ அந்த நல்ல விடயங்களை செய்கின்றார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதுவதில்லை. மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பின்லாந்தில் மிகுந்த செல்வந்தர் ஒருவரை சந்தித்தார். அந்த செல்வந்தர் தன்னுடைய குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவரால் பெறுமதியான காரை வாங்கியிருக்க முடியும் அல்லது வாடகைக்கு எடுத்திருக்க முடியும். அவருக்கு எது சந்தோசத்தைக் கொடுக்கின்றதோ அதனை அவர் செய்து கொண்டிருந்தார்.
02. இயற்கையின் நன்மைகளை கவனிக்கத் தவறுவதில்லை
சக்தயையும் நிம்மதியையும் மனதிற்கு அமைதியையும் தருவதால் 87 சதவீதமான பின்லாந்து மக்கள் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பின்லாந்தில் தொழிலாளர்களுக்கு 4 வார விடுமுறை வழங்கப்படுகின்றது. அதிகமான பின்லாந்து மக்கள் அந்த விடுமுறையை நாட்டுப்புறங்களுக்குச் செல்லவும் இயற்கையோடு ஒன்றிணையவும் பயன்படுத்துகின்றனர். மக்கள் தங்களுடைய வசிப்பிடங்களிலேயே இயற்கையை அனுபவிப்பதற்காக பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
03. நம்பிக்கையை உடைப்பதில்லை.
மனிதப் பண்புகள் மீது நம்பிக்கையுடன் இருப்பதால் பின்லாந்து மக்கள் சந்தோசமாக இருக்கின்றனர். 2022 இல் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 192 பணப்பைகள் 16 நகரங்களில் விடப்பட்டன. ஹெல்ஸின்கி நகரில் 12 பணப்பைகளில் 11 திரும்ப உரியவர்களிடம் கிடைத்தன. பின்லாந்து மக்கள் நேர்மை, நம்பிக்கையானவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
நீங்கள் உங்கள் மடிக்கணினியையோ தொலைபேசியையோ நூலகம் அல்லது புகையிரதத்தில் தவற விட்டால் அது மீண்டும் கிடைக்கும் என்று நீங்கள் நம்பலாம்.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Finland, world happiest country finland
Tags:
பின்லாந்து