CES 2023 கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய விடயங்களைப் பற்றி தொடர்ச்சியாக நாம் பார்த்து வருகின்றோம். இன்று மற்றுமொரு கண்டுபிடிப்பைப் பற்றிப் பார்ப்போம்.
John Deere எனப்படும் உழவு இயந்திர நிறுவனம் புதியதொழில்நுட்பங்கள் இரண்டை அறிமுகம் செய்திருக்கின்றது. Exact shot, Fully Electric Excavator என்பனவே அவையாகும்.
01. Exact Shot
இது நவீன முறையில் உரம் விசிறும் தொழில்நுட்பமாகும். இதில் பொருத்தப்பட்டிருக்கின்ற உணரிகளும் (Sensors) ரோபோ இயந்திரமும் எந்த விதைக்கு உரம் தேவை என்பதை துல்லியமாகக் கணித்து உரமிடும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அனைத்து விதைகளுக்கும் தொடர்ச்சியாக உரத்தை போடாமல் தேவையான விதைக்கு மட்டும் உரத்தைப் போட முடியும். இதனால் உரம் வீணடிக்கப்படாமல் சேமிக்கப்படுகின்றது. ஒவ்வொரு விதையும் விதைக்கப்படுவது Sensor மூலம் உணரப்பட்டு தேவையான அளவான உரமானது ரோபோ மூலம் ஒவ்வொரு விதை மீதும் சரியாக விசிறப்படும்.
02. Fully Electric Excavator
மற்றுமொரு கண்டுபிடிப்புதான் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் உழவு இயந்திரமாகும். Kreisel Battery மூலம் இது இயங்குகின்றது. குறைந்தளவான சத்தத்தையே இது வெளிப்படுத்துவதால் ஒலி மாசடைவது குறைவாகும். Zero Emission ஐ உடையது.அதாவது இது புகையை வெளிப்படுத்தாது. அத்துடன் இதற்கான பராமரிப்புச் செலவும் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.
மேற்குறித்த தொழில்நுட்பங்களின் செயற்பாடுகளை தொலைபேசி மூலம் அவதானிக்க முடியும்.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
CES 2023, Exact Shot, John Deere,Fully Electric Excavator
Tags:
தொழில்நுட்பச் செய்திகள்