உலக நிகழ்வுகள் மே 2022






இலங்கை நிகழ்வுகள்

கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த நெதுங்கமுவ ராஜா யானையை தேசிய உடைமையாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியது. 

இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். 

உலக நிகழ்வுகள்

உலக ஊடக சுதந்திர சுட்டெண் எல்லையில்லா ஊடக அமைப்பால் வெளியிடப்பட்டது. இதில் இலங்கைக்கு 146ஆம்  இந்தியாவுக்கு 156ஆவது இடம் கிடைத்துள்ளது. நோர்வே முதலாம் இடத்திலும் டென்மார்க் இரண்டாம் இடத்திலும் சுவீடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கொங்கோ நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் பரவியிருக்கின்றமை கண்டறியப்பட்டது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் குரங்கம்மை (Monkeypox Virus) தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டார். அண்மையில் மேற்காபிரிக்காவிலிருந்து திரும்பியவரே இவ்வாறு தொற்றுக்குள்ளானார். மெக்சிகோவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகளாவிய ரீதியில் 20நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஹொங்கொங்கின் தலைவராக சீன சார்பான ஜோன் லீ தெரிவு செய்யப்பட்டார். 

கிழக்கு திமோரின் ஜனாதிபதியாக Jose Ramos-Horta பதவியேற்றார்.

அவுஸ்திரேலியாவின் பிரதமராக Anthony Albanese பதவியேற்றார்.

தென்கொரியாவின் ஜனாதிபதியாக Yoon Suk-yeol பதவியேற்றார்.

அல் ஜெஸீராவின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அக்லே இஸ் ரேலியப் படையால் மேற்குக்கரையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் செக் குடியரசு உறுப்பினராகியது. ஐ.நா மனித உரிமைப் பேரவையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு செக்குடியரசு உறுப்பினராகியது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவராக Sheikh Mohamed bin Zayed Al Nahyan நியமிக்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதித் தேர்தலில் Ferdinand “Bongbong” Marcos Junior வெற்றி பெற்றார். 

ஸ்பெய்னில் மாதவிடாய் பெண்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 

சோமாலியாவின் ஜனாதிபதியாக ஹஸன் ஷெய்க் மஹ்மூத் தெரிவு செய்யப்பட்டார். இத்தெரிவு பாராளுவமன்ற உறுப்பினர்கள் மூலம் நடைபெற்றது. 

நேட்டோ அமைப்பில் இணைவதற்காக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் விண்ணப்பித்தன. 

உலக சுகாதார அமைப்பின் தலைவராக பெட்ரோஸ் கேப்ரியேசஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 

ஜூன் மாத உலக நிகழ்வுகள் விரைவில் பதிவிடப்படும். மீண்டும் எமது இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள்.






ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்

pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022









கருத்துரையிடுக

புதியது பழையவை