இணையதளங்களை நாம் பார்ப்பதற்கு பல்வேறுபட்ட வலை மேலோடிகள் (Browsers) காணப்படுகின்றன. அவற்றுள் Google நிறுவனத்தின் Chrome வலைமேலோடி முக்கியமான ஒன்றாகும். கணினிகள்,தொலைபேசிகள் மற்றும் டெப் போன்றவற்றில் Google Chrome பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இருந்தாலும் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 ஆகிய பணி செயல்முறைகள் நிறுவப்பட்டுள்ள கணினிகளில் இனிமேல் Chrome இயங்காது என்று Google நிறுவனம் அறிவித்துள்ளது. Chrome இயங்குதளத்தின் தற்போதைய பதிப்பு Chrome109 என்பதாகும். விண்டோஸ் 7 விண்டோஸ் 8 களில் பயன்படுத்தப்படும் கடைசி Chrome பதிப்பு Chrome 109 ஆகும்.
இந்த வருடம் பெப்ரவரி 7 இல் Google Chrome வலைமேலோடியின் புதிய பதிப்பு வெளிவரவுள்ளது. இந்த Chrome பதிப்பை பாவிப்பதற்கு கணினிகளில் விண்டோஸ் 10 அல்லது விண்டோஸ் 11 இயங்கு தளங்கள் காணப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Chrome, Windows, Operating system
Tags:
தொழில்நுட்பச் செய்திகள்