உலகின் மிகப் பெரிய கடல் தாவரம் (புல்) மேற்கு அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு புல் தாவரம் சுமார் 200சதுர கிலோமீற்றருக்கு பரந்துள்ளது. ஒரு விதையிலிருந்து முளைத்த இந்த தாவரம் சுமார் 4500 வருடங்களாக வளர்ந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.
குரங்கம்மைக் காய்ச்சல் பிரான்ஸ் நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரித்தானிய மகாராணி எலிஸபத் பதவியேற்று 70 ஆண்டைக் குறிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
துருக்கி நாடு தன்னுடைய பெயரை துருக்கியே Türkiye என மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியது.
வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டத்தை பிரித்தானியா சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தது.
ஆசியாவில் மிக நீளமான தந்தத்தையுடைய யானை இந்தியாவில் உயிரிழந்தது. இது கபினி, போகேஸ்வரன் என அழைக்கப்பட்டது.
இந்தியாவின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |