டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவன CEO எலான மஸ்க் ட்விட்டர் CEO பரக் அக்ரவாலை விவாதத்திற்கு அழைத்துள்ளார். தன்னுடைய Fan ஒருவருடன் மேற்கொண்ட ட்விட்டர் உரையாடலிலேயே இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜனவரி 31 இல் ட்விட்டரின் 2.6 பில்லியன் பெறுமதியான 9.2 சதவீதமான பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். கடந்த ஏப்ரலில் எலான் மஸ்கை ட்விட்டரின் Boardடிற்கு சேருமாறு ட்விட்டர் அழைப்பு விடுத்தது. எலான் மஸ்கும் அதனை ஏற்றிருந்தார். இந்தப் பதவியானது ட்விட்டரின் 14.9 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்குகளை வாங்குவதை தடுப்பதோடு ட்விட்டர் சம்மந்தமாக வெளியிடத்தில் கருத்து வெளியிடுவதற்கும் வரையறையை ஏற்படுத்தியது.
எலான் மஸ்க் தன்னுடைய நியமனம் அமுலுக்கு வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் இணையும் முடிவை வாபஸ் வாங்கினார். ட்விட்டர் பற்றிய சர்ச்சையான விடயங்களை ட்விட்டரில் வெளியிட்ட பின்னரே அவர் இந்த முடிவை எடுத்தார். ட்விட்டரில் 5 சதவீதம் போலக்கணக்குகள் , Spam கணக்குகள் காணப்படுகின்றன என்பது தொடர்பிலேயே இந்த சர்ச்சை காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே எலான் மஸ்க் 43 பில்லியனுக்கு ட்விட்டரை வாங்கும் தன்னுடைய முடிவை அறிவித்தார். எனினும் ட்விட்டருக்கும் எலான் மஸ்கிற்கும் இடையில் தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்தது. இந்த நிலையிலேயே பராக் அக்ரவால் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.