ஜேர்மனிய முன்னாள் சான்சலர் அஞ்சலா மேர்கருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான பரிசு வழங்கப்பட்டது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பிலேயே இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் அங்கீகாரமளித்தது.
ASEAN அமைப்பு தன்னுடைய 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியாக Gustavo Petro பதவியேற்றார்.
ஐக்கிய இராச்சியத்தின் பணவீக்கம் 10.1% ஆக உயர்ந்தது.
மாதவிடாய்க்குத் தேவையான உற்பத்திகளை (Period Products - Tampons, Pads) இலவசமாக வழங்கும் முறை ஸ்கொட்லாந்தில் ஆரம்பமாகியது.
ஐதசரசன் சக்தியில் (Hydrogen - Powered) இயங்கும் ரயில் வண்டிகளின் சேவை ஜேர்மனியில் ஆரம்பமாகியது.
பாக்கிஸ்தானில் ஜூன் மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அண்ணளவாக 937 பேர் இறந்துள்ளனர்.
சோவியத் ரஷ்யாவின் கடைசி தலைவர் Mikhail Gorbachev தன்னுடைய 91 ஆவது வயதில் இறந்தார். இவர் பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது:
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |