உலகின் அதிசொகுசுச் கப்பலான மெயின் சிப் 5 இலங்கைக்கு விஜயம் செய்தது.
அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் , ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை 1905 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்தது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் போன்ற நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் 1905 எனும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும்.
அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் இலஞ்சம் கோரினால் 1954 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்கள்
01. பாதுகாப்பு அமைச்சு
02. நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு
03. தொழில்நுட்ப அமைச்சு
04. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
05. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
காலநிலை மாற்றம் தொடர்பான கோப் - 27 மாநாடு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்துக்கு பிரயாணம் செய்தார்.
இலங்கையின் முதலாவது குரங்கம்மைத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) கொழும்பு துறைமுகத்திற்கு 900 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்தது.
குரங்கம்மை நோயை எம் அம்மை ஃ எம் பொக்ஸ் என அழைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.
அமெரிக்க கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தால் இலங்கைக் கடற்படைக்கு பி627 என்ற ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் 'விஜயபாகு' என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டது.
பிரித்தானியாவிடமிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதை அறிந்து கொள்வதற்காக அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் நடாத்துவதற்குத் தீர்மானித்திருந்த வாக்கெடுப்புக்கு பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் 144 கோடி மக்கள் தொகையுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 139 கோடிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2 கோடிகளுடன் இலங்கை 58 ஆவது இடத்தில் உள்ளது.
எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
சந்திரனுக்கு மனிதனை மீள அனுப்பும் திட்டத்தின் முதற்கட்டமாக ஒரியன் விண்கலத்தை Artemis 1 எனப்படும் ரொக்கட் மூலம் சந்திரனுக்கு அனுப்பியது.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவுவதற்கு நிதி ஒன்றை ஏற்படுத்த எகிப்தில் இடம்பெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை நீக்கப்பட்டது. ஜனவரியில் அமெரிக்காவின் Capitol கட்டடத்தில் இடம் பெற்ற போராட்டங்களையடுத்து டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரேஸிலின் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் Lula da Silva வெற்றி பெற்றார். அவர் எதிர்வரும் ஜனவரி 1 இல் பதவியேற்கவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு இருபது கிறிக்கட் தொடரின் இறுதியாட்டத்தில் பாக்கிஸ்தானை வென்று இங்கிலாந்து கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை இந்தியாவின் விராட் கோலியும் அதிக விக்கட்டுக்களை இலங்கையின் வனிது ஹஸரங்கவும் பெற்றுக் கொண்டனர்.
ரி 20 உலகப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை இந்திய வீரர் விராத்கோலி பெற்றார். பங்களாதேசுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையைப் பெற்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையை இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன பெற்றிருந்தார். 1016 ஒட்டங்களுடன் பெற்றிருந்தார். இந்த ஓட்டங்களைத் தாண்டியே விராத் கோலி மேற்படி சாதனையை அடைந்தார்.
ரி20 சர்வதேச போட்டிகளில் 4,000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சாதனை படைத்தார்.இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்ட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியின்போதே அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |