அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவுஸ்திரேலியாவினால் நன்கொடையாக அளிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்தது.
ஐ.நா பொதுச் சபையின் 77 கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியுயோர்க்கில் நடைபெற்றது. இதில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னவல மிருகக்காட்சிச்சாலைக்கு இரவு சபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. இதன் மூலம் பார்வையாளர்கள் இங்கு இரவு நேரத்திலும் விஜயம் செய்து பார்வையிட முடியும்.
தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் இருந்த 79 வயதான 'பந்துல' என்ற யானை உயிரிழந்தது.
இலங்கைப் பாராளுவமன்றம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகம் என்பன இணைந்து பாராளுவமன்றத்தின் செயற்பாடுகள் நடைமுறைகள் தொடர்பான குறுகிய கால பாடநெறியொன்றை ஆரம்பித்தன.
பாராளுவமன்ற தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 'தேசிய பேரவை' சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 29.09.2022 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஆர்ஜண்டினாவின் உதவி ஜனாதிபதிமீது துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அடுத்து தொடர்ச்சியாக அங்கு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெக்சிக்கோவில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றில் சுவாமி விவேகானந்தரின் சிலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
டென்னிஸ் வீரர் ரொஜப் பெடரர் லேவர் கிண்ண போட்டியின் பின்னர் தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார்.
விண்வெளியில் நீண்ட காலம் பயணித்து சாதனை புரிந்த ரஷ்யாவின் விண்வெளி வீரரான வலேரி பொல்யாகொவ் தன்னுடைய 80 ஆவது வயதில் காலமானார். 1994 இற்கும் 1995 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 437 நாட்கள் இவர் விண்ணில் பயணித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் 92 ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் Liz Truss (லிஸ் ட்ரஸ்) தெரிவு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியான ரிஷி சுனேக் என்பவரைத் தோற்கடித்தே இவர் தெரிவு செய்யப்பட்டார்.பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கடந்த ஜூலை மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி எலிசெபத் II தன்னுடைய வயதில் மரணமடைந்தார். மகாராணி எலிசெபத் தன்னுடைய 25 ஆவது வயதில் மகாராணியாகப் பதவியேற்று வருடங்கள் பதவியில் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மகாராணியின் மரணத்தை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக அவரது மகன் இளவரசர் சார்ள்ஸ் III பதவியேற்றார்.
உலகில் நீண்ட காலம் ஆட்சி புரியும் முடியாக (மன்னராக) புரூனே சுல்தான் பெயரிடப்பட்டார். பிரித்தானிய மகாராணியின் மரணத்தை அடுத்து இவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர் 1967 இலிருந்து 55 வருடங்களாக மன்னராக உள்ளார்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள புறக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது. இந்தப் புறக் கோள் HIP 65426 b என அழைக்கப்படுகிறது.
பங்களாதேஷில் படகு கவிழ்ந்ததில் முப்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இத்தாலியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான இத்தாலி சகோதரர்கள் கட்சி வெற்றி பெற்றது. எனவே அதன் தலைவி ஜோர்ஜியோ மெலோனி இத்தாலியின் பெண் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு இது 6 ஆவது வெற்றியாகும். இந்தத் தொடரின் ஆட்ட நாயகன் வனிது ஹஸரங்க ஆவார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் அதிக ஓட்டங்களை பாக்கிஸ்தானின் முஹம்மத் றிஸ்வானும் அதிக விக்கட்டுக்களை இந்தியாவின் புவனேஸ்வர் குமாரும் பெற்றுக் கொண்டனர்.
முன்னைய மாதங்களுக்கான செய்தித் தொகுப்புக்களை அறிய கீழே உள்ள இணைப்புக்களை Click செய்யுங்கள்.
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |