உலக நிகழ்வுகள் டிசம்பர் 2022

 


சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் சமின் தனது 96 ஆவது வயதில் காலமானார். இவர் 1993 தொடக்கம் 2003 வரை சீனாவின் ஜனாதிபதியாகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்ட 'Mandous' எனும் சூறாவளியானது  வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசம் ஊடாக கடந்து சென்றது.

நவம்பர் மாதம் நிலவுக்கு நாசாவால் அனுப்பப்பட்ட ஒரியன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. 

2022 ஆம் ஆண்டுக்கான உலகில் அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியலை  Economist Intelligence Unit (EIU) அமைப்பு வெளியியிட்டது.இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. கடந்த வருடம் முதலிடத்தில் காணப்பட்ட இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் இம்முறை மூன்றாம் இடத்தில் உள்ளது. 


இந்த ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு பெலாரஸ்,ரஷ்யா,உக்ரேனைச் சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. உக்ரேனிய சிவில் சுதந்திர நிலையத்தின் தலைவர் ஒடிக்லாக்ஷாண்டரா அவர்களுக்கும் ரஷ்ய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மட்விசு அவர்களுக்கும் பெலாரஸ் செயற்பாட்டாளர் அலெஸ் பியலிய்ட்ஸ்கி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. அலெஸ் பியலிய்ட்ஸ்கி சார்பில் அவரது மனைவி நடாலியா பின்சும் பெற்றுக் கொண்டார். 

சிலியின் வட பகுதியிலுள்ள லஸ்கார் எரிமலை 6000 மீற்றர் உயரத்திற்கு சாம்பலையும் புகையையும் வெளித்தள்ளியது. 

மலேசியா பொதுத் தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் கட்சி வெற்றி பெற்றது. அதனையடுத்து அதன் தலைவர் அன்வர் இப்றாகிம் மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றார். இவர் மலேசியாவின் பத்தாவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்த இன்சைட் விண் கலத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

பெருவின் முதல்  பெண் அரசுத் தலைவராக தீனா பொலுவார்த்தே நியமிக்கப்பட்டார். பெருவின் நாடாளுவமன்றத்தைக் கலைக்கும் முயற்சி தோல்வியடைந்த பின்னர் அரசுத் தலைவரான  பேதுரோ காசுத்தீலியோ பதவி விலக்கப்பட்டதையடுத்து இந்த நியமனம் இடம் பெற்றுள்ளது.  

அமெரிக்காவின் நாணயத் தாள்களில் (01 டொலர் மற்றும் 5 டொலர்) முதன்முறையாக இரண்டு பெண்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க திறைசேறியின் செயலாளர் Janet Yellen இனதும் அமெரிக்காவின் பொருளாளர் Lynn Malerba வினதும் கையொப்பங்களே அவை. 

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய புஷ்ப கமல் தஹல் / பிரசண்டா  எதிர்க்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த பின் நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 

வணிக ரீதியிலான விண்கலமொன்றை(Lander) ஜப்பானின் ispace நிறுவனம் நிலவுக்கு ஏவியது. SpaceX Falcon 9ரொக்கட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து இதனை ஏவியது. 

Al Rashid எனப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் விண்கலமொன்றும் (Rover) புளோரிடாவிலிருந்து ஏவப்பட்டது. 

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு  11 வருட சிறைத்தண்டனையும் 5 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னாள் பாப்பரசர் பெனடிக் 16 தன்னுடைய 95 ஆவது வயதில் காலமானார். இவர் 2005 இலிருந்து 2013 வரை பாப்பரசராகக் கடமையாற்றினார். இவர் ஜேர்மனியைச் சேர்ந்தவர். 

பிரான்சுக்கும் ஆர்ஜன்டீனாவுக்கும் இடையே நடைபெற்ற உலகக் கிண்ண உதைப்பந்து இறுதிப் போட்டியில் நான்கிற்கு இரண்டு என்ற பெனால்ட்டி அடிப்படையில் ஆர்ஜன்டீனா வெற்றியீட்டியது. 

பிரேஸில் கால்பந்து வீரர் பீலே தன்னுடைய 82 ஆவது வயதில் காலமானார். 

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்

pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022









கருத்துரையிடுக

புதியது பழையவை