UEFI vs. BIOS : எது வேகமானது?


Firmware என்றால் என்ன?

கணினி தொடர்பாக நாம் அறிந்து கொள்ளுகின்ற போது Software பற்றி அறிந்திருப்போம். Hardware பற்றி அறிந்திருப்போம். இவற்றைப் போன்று கணினியில் ஒரு முக்கியமான பகுதிதான் Firmware ஆகும். கணினியின் Mother Board இல் Firmware காணப்படும். இயங்குதளம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இது இயங்க ஆரம்பிக்கின்றது. கணினியை On செய்யும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு வன்பொருட்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பதனைக் கட்டுப்படுத்துவதோடு இயங்குதளத்தையும் இயக்குகின்றது.

Firmware எவ்வாறு தொழிற்படுகின்றது?

நாம் கணினியை On செய்த பின்னர் இயங்குதளம் (Operating System) ஆரம்பிப்பதற்கு முன்பாக Firmware இயங்க ஆரம்பிக்கின்றது என்று நாம் மேலே பார்த்திருந்தோம். Firmware வானது முதலில் RAM, keyboard, Disk (HDD/SSD), Display போன்ற வன்பொருட்கள் இயங்குகின்றனவா என்பதனைப் பரிசோதிக்கின்றது. இச்செயன்முறையானது POST என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. Power On Self Start என்பது இதன் விரிவாகும். இந்தப் பரிசோதனைகளின் போது வன்பொருட்களில் ஏதாவது பிரச்சனை காணப்பட்டால் இயங்குதளம் இயங்க ஆரம்பிக்காது. இந்தப் பரிசோதனைகளின் போது வன்பொருட்களில் பிரச்சனைகள் இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக  HDD / SSD / USB / DVD போன்ற Boot Device ஐ அடையாளம் காண்கின்றது. அதன் பிறகு Boot Loader ஐ இயக்குகின்றது.Boot Loaderஎனப்படுவது இயங்கு தளத்தை ஆரம்பிக்கும் ஒரு சிறிய Program ஆகும். இச் செயன்முறையை கீழேயுள்ள படம் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

Power ON

   ↓

BIOS / UEFI (Firmware)

   ↓

Bootloader

   ↓

Operating System (Windows)


Firmware வின் வகைகள்

01. Bios (Basic Input Output System)
இது நம்மில அநேகமானோருக்குப் பரிச்சயமானது. பெரும்பாலும் நீல நிற திரையில் அவதானித்திருப்போம். இது பழைய கால கணினிகளில் பயன்பாட்டில் இருந்தது. இப்போதும் பழைய கணினிகள் இருந்தால் இதனை நாம் அவதானிக்கலாம். இதன் இடைமுகப்பானது எழுத்துக்களை மாத்திரம் கொண்டது. எந்தவிதமான வரைவியல் இடைமுகப்பும் இல்லை. இதனால் Mouseஇனால் கட்டுப்படுத்த முடியாது.  இது MBR முறைமையுடன் ஒத்துழைக்கின்றது. உயர்ந்த பட்சமாக 2.2 Terabytes (TB) அளவிலான Drive களில் பயன்படுத்தப்பட முடியும். USB மூலமாக விண்டோஸை நிறுவுவதற்காக RUFUS மென்பொருளில் settings செய்கின்றபோது MBR ஐ தெரிவு செய்ய வேண்டும். 


02. UEFI
Bios இற்கு மாற்றீடாக நவீன கணினிகளில் காணப்படும் Firmware தான் UEFI ஆகும். தற்கால கணினி, மடிக்கணினி, Tablet Computer போன்றவற்றில் இது காணப்படுகின்றது. விண்டோஸ் 11 இயங்குதளமானது இயங்குவதற்கு UEFI தான் Officially தேவை. ஆனால் Bios இலும் Windows 11 மாற்று வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு மாற்று வழிகளில் பயன்படுத்தினாலும் அதற்குரிய உத்தியோகபூர்வமான Supportகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. மூலம் இதனைப் பயன்படுத்த முடியும்.GPT Partition முறைமையுடன் ஒத்துழைக்கின்றது. . உயர்ந்த பட்சமாக 9.4 Zettabytes (ZB) அளவிலான Drive களில் பயன்படுத்தப்பட முடியும். இயங்கு தளத்தினை வேகமாக இதில் செய்ய முடியும். USB மூலமாக விண்டோஸை நிறுவுவதற்காக RUFUS மென்பொருளில் settings செய்கின்றபோது GPT யை தெரிவு செய்ய வேண்டும். இது Bios ஐப் பார்க்கிலும் வேகமானது.

03. EFI (Extensible Firmware Interface)
Intel நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட (Developed) இது பழைய Apple Mac கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. UEFI ஆனது EFI இன் தரப்படுத்தப்பட்ட (standardized version) வடிவமாகும். EFI  ஆனது தற்காலத்தில் நேரடிப் பயன்பாட்டில் இல்லை.

04. Open Firmware
இது பழைய கால Apple, Sun, PowerPC systems போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டது. தற்கால நவீன கணினிகளில் பயன்பாட்டில் இல்லை.


உங்கள் கணினியின் Firmware வகையினை எவ்வாறு அறிந்து கொள்வது?

Window Key உடன் r ஐ அழுத்தி Run இற்கு செல்லுங்கள். அதில் msinfo32 என தட்டச்சு செய்து Enterஐ அழுத்துங்கள்.

Bios Mode என்பதற்கு நேரே பாருங்கள். அதில் BIOS இருந்தால் உங்கள் கணினி BIOS ஐப் பயன்படுத்துகின்றது. UEFI என்று இருந்தால் உங்கள் கணினி UEFI ஐப் பயன்படுத்துகின்றது.


எப்போது Firmware வை செய்ய வேண்டும்?

சில காரணங்களின் அடிப்படையில் Firmwareவை Update செய்ய வேண்டி ஏற்படலாம். 
1. கணினியில் Boot பிரச்சனைகள் காணப்படும் போது.
2. Firmwareவானது RAM , SSD, Key boardபோன்ற வன்பொருட்களை அடையாளம் காண முடியாத போது.
3. உற்பத்தியாளர் (Manufacturer) Firmwareவை இற்றைப்படுத்தும் படி சிபாரிசு செய்யும் போது.
4. உற்பத்தியாளர் (Manufacturer) அச்சுறுத்தல் பாதுகாப்பு பற்றி எச்சரிக்கின்ற போது.

இந்தக் கட்டுரையில் பற்றிய அடிப்படையான விடயங்களை அறிந்து கொண்டோம். இது தொடர்பான மேலதிக விடயங்கள் எதிர்காலத்தில் இற்றைப்படுத்தப்படும். உங்கள் கருத்துக்களை எமக்குத் தெரிவியுங்கள்.

கட்டுரையாக்கம்:
உ.லெ.அ. றஸ்மி, ஏறாவூர், இலங்கை

கருத்துரையிடுக

புதியது பழையவை