உலக நிகழ்வுகள் ஜனவரி 2023

 


இலங்கை நிகழ்வுகள்
இலங்கையின் முதலாவது பெண் இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார். கங்க அத்தர என்பது இவர் இயக்கிய பிரபலமான ஒரு திரைப்படமாகும். 

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி திருமதி தில்குஷி அனுலா விஜேசுந்தரே மற்றும் கலாநிதி திருமதி வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவிக் காலம் 03 வருடங்களாகும். 

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் டுவிக்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

தேசிய பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில் இடம் பெற்றது. 

உலக நிகழ்வுகள்

சவூதி அரேபியாவின் அல் நாசிர் கழகத்தில் உதைப்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்து கொண்டார். எதிர்வரும் 2025 வரை இவரது ஒப்பந்தம் செல்லுபடியாகும். 

பிரேசிலின் ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவி ஏற்றார். பிரேசில் ஜனாதிபதியாக அவர் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.

குரோசியா யூரோ வலயத்திற்கு மாறியது. எனவே தன்னுடைய குனா நாணயத்தை செல்லுபடியற்றதாக்கி யூரோ நாணயத்தை புழக்கத்திற்கு கொண்டு வருகிறது. யூரோ வலயத்தில் இணைந்து கொள்ளும் 20 ஆவது நாடு குரோசியாவாகும். அத்துடன் குரோசியா செங்கன் வலயத்திலும் இணைந்து கொண்டது. செங்கன் வலயத்தில் இணைந்து கொள்ளும் 27 ஆவது நாடு குரோசியாவாகும்.  

அப்பலோ 7 விண்வெளித் திட்டத்தில் பயணம் செய்து உயிர் வாழ்ந்த கடைசி வீரர் வோல்டர் கன்னிங்ஹாம் தன்னுடைய 90 ஆவது வயதில் காலமானார்.  இது தொடர்பான செய்தியை இங்கே பாருங்கள்.

இந்தியாவின் மோதேராவிலுள்ள சூரிய கோவில், குஜராத்திலுள்ள வட்நகர் நகரம் மற்றும் திரிபுராவிலுள்ள உனக்கோட்டின் மலைத்தொடரில் செதுக்கப்பட்டுள்ள  சிற்பங்கள் என்பன உலக மரபுரிமைத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.(தற்காலிகமாக..)

கிரேக்கத்தின் கடைசி மன்னராக இருந்த இரண்டாவது கொன்ஸ்தாந்தைன் தனது 82 ஆவது வயதில் காலமானார். கிரேக்கத்தில் முடியாட்சி 1973 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே அதிக சொத்துக்களை இழந்து எலான் மஸ்க் சாதனை படைத்தார். 2021 நவம்பரிலிருந்து 2022 டிசம்பர்  வரையான காலப்பகுதியில் இவர் 165 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளார். 

உலகின் அதிக வயதானவரான பிரான்ஸ் நாட்டின் கன்னியாஸ்திரி லுசில் ரன்டன் தனது 118 ஆவது வயதில் காலமானார். 

நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து பெகோராவை நோக்கி 72 பயணிகளுடன் பயணித்த Yeti Airlines விமானம் விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

உலக ப்ரெய்லி தினம் (World Braille Day) ஜனவரி 4 இல் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகின் முதலாவது ஓலைச் சுவடி நூதன சாலை (Palm Leaf Manuscript Museum) கேரளாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அமெரிக்க பாராளுவமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக Kevin McCarthy தெரிவு செய்யப்பட்டார். இவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 55 ஆவது சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2022 இற்கான Miss Universe ஆக அமெரிக்காவின் R'Bonney Gabriel முடி சூடினார்.

LHS 475 b என்ற புறக்கோளொன்றை ஜேம்ஸ் வெப் தொலைகாட்டி கண்டுபிடித்ததாக நாசா அறிவித்தது.

நியுஸிலாந்து பிரதமர் Jacinda Ardern தன்னுடைய இராஜிநாமாவை அறிவித்தார். 

அமெரிக்காவின் வடகொரியாவுக்கான மனித உரிமை தூதுவராக Julie Turner அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் பெயரிடப்பட்டார். 

2022 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் Sir Garfield Sobers சேர் கார்பில் சோர்பஸ் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றார்.

பேரழிவுக் கடிகாரம் நள்ளிரவுக்கு 90 விநாடிகள் நெருக்கமாக வைக்கப்பட்டது.

பெப்ரவரி 2023 இற்குரிய குறிப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் இந்தப் பதிவினை அதிகம் பகிர்ந்து அதிகமானோர் பார்வையிடுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்துங்கள். 

கடந்த வருட மாதாந்த செய்திகளை அறிய கீழேயுள்ள இணைப்புக்களைக் க்ளிக் செய்யுங்கள். 


ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்





pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022


கருத்துரையிடுக

புதியது பழையவை