நீண்ட தூரம் பறந்து சாதனை


Gotwit (Limosa Lapponica) என்பது ஒரு சிறிய பறவை. இது அண்மையில் ஒரு சாதனையை நிலைநாட்டியிருக்கின்றது. இடைவிடாமல் தொடர்ச்சியாக நீண்ட தூரம் பறந்த பறவை என்ற கின்னஸ் சாதனையை இது நிகழ்த்தியிருக்கின்றது. அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா வரை 8435 மைல்களை (13560 கிலோ மீற்றர்கள்)  உணவோ ஓய்வோ இன்றி  11 நாட்களில் இது கடந்திருக்கின்றது. 

இந்தப் பறவையில்  செய்மதித் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஒரு 5G Tag கட்டப்பட்டிருக்கின்றது. இந்த Tag இன் இலக்கம் 234684 ஆகும். இந்த இலக்கத்தின் மூலமே இந்தப் பறவை அடையாளம்  காணப்படுகின்றது. இந்த Tag ஐ அடிப்படையாக வைத்தே இது நீண்ட தூரம் பறந்தமை கண்டறியப்பட்டிருக்கின்றது. 

இந்தப் பறவையின் பயணம் கடந்த வருடம் ஒக்டோபர் 13 அன்று ஆரம்பித்தது.கடந்த 2020 இல் இதே இனத்தைச் சேர்ந்த பறவை தொடர்ச்சியாகப் பறந்த 350 கிலோமீற்றர் தூரத்தை முறியடித்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

 


Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




 

 Guinness Record, longest non-stop migration by a bird

கருத்துரையிடுக

புதியது பழையவை