அப்பலோ 7 விண்வெளி வீரர் மரணம்


 அப்பலோ 7 விண்கலத்தில் விண்ணுக்குச் சென்ற விண்வெளி வீரர்களுள் கடைசியாக உயிருடன் இருந்த விண்வெளி வீரரான Walter Cunningham தன்னுடைய 90 ஆவது வயதில் காலமானார். கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்ற இவர் தன்னுடைய 36 ஆவது வயதில் நாசாவில் இணைந்து கொண்டார். நாசாவில் இணைவதற்கு முன் இவர் கடற்படையில் பெயரிடப்பட்டு 1952 இல் விமானிக்குரிய பயிற்சியைப் பெற்றார். யுத்த விமானத்தின் விமானியாகக் கடமையாற்றிய இவர் கொரியாவில் 54 யுத்த நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். .

நாசாவிலிருந்து விலகிய பின் இவர் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டார். முதலீட்டாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் தொழில் முயற்சியாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் விண்வெளி திட்டமான அப்பலோ திட்டத்தில் முதன் முதலாக விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய திட்டமே அப்பலோ 7 திட்டமாகும். 1968 இல் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் 11 நாட்களைக் கொண்டது. அத்துடன் முதன்முதலாக விண்வெளியிலிருந்து அமெரிக்கர்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்த விண்வெளிப் பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.  








Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




Flex Hybrid OLED,  Flex Slidable Solo, Flex Slidable Duet, QD - OLED Panels, Samsung, CES 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை