பாமினி எழுத்து முறைமை
நான் கணினியை பயன்படுத்துவதற்கு தொடங்கிய 2003 ஆண்டு கால பகுதியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு பாமினி எழுத்துரு முறையே பிரபல்யமாக இருந்தது. பாமினி (Bamini) எனப்படுவது அக்காலத்தில் தட்டச்சு செய்வதற்கு பிரபல்யமாக இருந்த ஒரு எழுத்துரு (Font) வடிவமாகும் தற்காலத்திலும் பாமினி பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இதனுடைய சாவிப் பலகை அமைப்பை (Keyboard Layout) பார்க்கின்ற போது இது தமிழ் தட்டச்சு இயந்திரத்தினுடைய (Tamil Type Writer) சாவிப் பலகை அமைப்பை அமைப்பை ஒத்தது. அதாவது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் Type Writer இயந்திரத்தில் தமிழ் சாவிகள் எந்த ஒழுங்கு முறையில் அமைந்து காணப்படுமோ அதே ஒழுங்கு முறையில் இந்த பாமினியுடைய சாவிகள் (Keys) அமைந்து காணப்படுகின்றன. பாமினிக்கு மேலதிகமாக Adankappidaari, Kilavi போன்ற பல எழுத்துரு வகைகளும் காணப்பட்டன. இவையும் பாமினியுடைய Keyboard அமைப்பை ஒத்து காணப்படுகின்றன. ஆனால் அவற்றினுடைய எழுத்து அலங்காரங்கள் வேறு. உதாரணமாக ராஜா எனப்படுபவரின் கையெழுத்து ஒரு வடிவத்தில், ஒரு அலங்காரத்தில் காணப்படும். ரமேஷ் என்பவரின் கையெழுத்து இன்னொரு வடிவத்தில் காணப்படும். இரண்டு பேருடைய எழுத்து வடிவங்கள் வித்தியாசமாக இருக்கும். அதேபோன்றுதான் எழுத்துருக்களும் வேறுபடுகின்றன பாமினி எழுத்துரு ஒரு அலங்காரத்தில், வடிவத்தில் காணப்படும். அடங்காப்பிடாரி மற்றுமொரு அலங்காரத்தில் வடிவத்தில் காணப்படும்.
Bamini எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள வடிவத்தில் காட்சியளிக்கும்.
Adankappidaari எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள வடிவத்தில் காட்சியளிக்கும்.
Kilavi எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள வடிவத்தில் காட்சியளிக்கும்.
Aarabi எழுத்துருவில் தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள வடிவத்தில் காட்சியளிக்கும்.
அத்துடன் இந்த முறையில் தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் போது அம்மா என தட்டச்சு செய்ய வேண்டுமாயின் சாவிப் பலகையில் mk;kh ஆகிய சாவிகளை (Keys) அழுத்த வேண்டும் மரம் என்பதை தட்டச்சு செய்ய வேண்டுமாயின் kuk; ஆகிய சாவிகளை (Keys) கணினியில் அழுத்த வேண்டும் இவ்வாறு ஒவ்வொரு ஆங்கில எழுத்துகளிலும் அவற்றுக்கேயுரிய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன
பாமினி எழுத்து முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எங்கள் கணினியில் திறக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் கணினியில் பாமினி இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் அந்த ஆவணம் சரியான முறையில் காணப்படாது. பாமினியில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கு உரிய ஆங்கில எழுத்துக்களையே அது காண்பிக்கும். எனவே அந்த ஆவணத்தை நாம் சரியாக பார்த்து வாசிப்பதற்கு பாமினி எழுத்துமுறை எமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அல்லது பாமினியைப் போன்ற எழுத்து அமைப்பு முறையைக் கொண்ட ( Adankappidaari, Kilavi போன்ற) மற்றுமொரு எழுத்துரு காணப்பட வேண்டும் . அவ்வாறு நிறுவுகின்ற (Install) போதே நாம் அந்த எழுத்துக்களை வாசிக்க முடியும். ஆனாலும் அதனுடைய வடிவங்கள் மாறி இருக்கும். பாமினியினுடைய எழுத்து வடிவம் வேறு. பாமினி போன்ற வேறு எழுத்துருக்களின் எழுத்து வடிவமும் வேறு.
இணையத்தளங்களிலும் இதே முறைதான் காணப்படுகின்றது பாமினி எழுத்துருவில் உருவாக்கப்பட்ட இணைய பக்கம் ஒன்றை நாம் திறந்தால் எமது கணினியில் பாமினி எழுத்துரு நிறுவப்பட்டிருந்தால் மாத்திரமே அந்த பக்கம் சரியான முறையில் காட்சியாகும் அப்படி இல்லாவிட்டால் வேற எழுத்துகளுக்குரிய ஆங்கில எழுத்துக்களையே காண்பிக்கும். அதனை சரியான முறையில் நாம் பார்த்து வாசிப்பதாக இருந்தால் பாமினி எழுத்துருவை எமது கணினியில் நிறுவ வேண்டும். அல்லது பாமினியைப் போன்ற வேறு ஏதாவது எழுத்துருவை எமது கணினியில் நிறுவ வேண்டும். அப்படி நிறுவினாலும் பாமினி எழுத்திற்குரிய வடிவத்தை காட்டாது. நாம் என்ன எழுத்துருவை நிறுவியிருக்கிறோமோ அந்த எழுத்துருவின் வடிவத்திலேயே எழுத்துக்கள் காட்சியளிக்கும்.
ஆனால் வாட்ஸ் அப்பில் (Whats App) செய்திகள் (Messages) அனுப்புதல் முகநூலில் (Face Book) பதிவுகளை ( Posts) கருத்துக்களை (Comments) இடுதல் போன்றவற்றுக்கு இந்த பாமினி எழுத்துருவைப் பயன்படுத்த முடியாது. எனவே இதற்கு மாற்றிடாக நாம் யூனிகோட் (Unicode) முறையில் அமைந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும்.
எமது கணினியில் யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
- முதலில் எமது கணினியில் தமிழ் Unicodeடை இசைவாக்கம் செய்ய வேண்டும். ஆனால் விண்டோஸ் 10 / 11 கணினிகளில் தமிழ் யூனிகோட் இயல்பாகவே இசைவாக்கம் செய்யப்பட்டிருக்கும் (Built in unicode support).
- அதன்பின்னர் தமிழ் மொழியை கணினியில் சேர்க்க வேண்டும். (Adding the language)
- கணினியில் தமிழை நாம் சேர்ப்பதற்கு விண்டோஸ் Logoவை Click செய்யுங்கள்
- அதில் Settings கிளிக் செய்யுங்கள்
- பின்னர் Time and Language கிளிக் செய்யுங்கள்
- பின்னர் Language என்பதை கிளிக் செய்யுங்கள்
- அதில் Add a language என்பதை கிளிக் செய்யுங்கள்
- பின்னர் தோன்றும் பெட்டியில் Search Bar ரில் தமிழ் (இந்தியா) அல்லது தமிழ் (இலங்கை) என்பதை தெரிவு செய்யுங்கள். அல்லது இரண்டு முறைகளும் தேவையென்றாலும் ஒன்றை நிறுவி முடிந்த பின்னர் மற்றதையும் நிறுவலாம்.
Input Method or Keyboard Layout அமைப்பை எமது கணினியில் எவ்வாறு நிறுவுவது?
4. அதன் பின்னர் கணினியில் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை தெரிவு செய்தல். விண்டோஸ் 10/11 இயங்கு தளத்தில் தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்கள் சில இயல்பாகவே காணப்படுகின்றன. Nirmala UI, Latha, Vijaya என்பனவே அவை. இப்போது MS Word மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். எழுத்துருவைத் தெரிவு செய்யும் இடத்தில் Nirmala UI, Latha, Vijaya ஆகிய எழுத்துருக்களுள் ஏதாவதொன்றைத் தெரிவு செய்த பின்னர் தமிழ் யுனிக்கோட்டில் தட்டச்சு செய்ய முடியும்.
ஏனைய தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்களின் பெயர்களை சில கீழே காணப்படுகின்றன.
- Noto Sans Tamil (Google நிறுவனத்தினுடையது.)
- Noto Serif Tamil (Google நிறுவனத்தினுடையது.)
- Lohit Tamil
- Catamaran (Google நிறுவனத்தினுடையது.)
- Mukta Malar (Google நிறுவனத்தினுடையது.)
இதுவரை நாம் மேலே பார்த்தவை விண்டோஸைப் பயன்படுத்தி எவ்வாறு தமிழில் யுனிக்கோட் முறையில் தட்டச்சு செய்யலாம் என்பதாகும். ஆனால் நான் 2003 ஆம் ஆண்டிலிருந்து பழகிய பாமினி எழுத்துரு முறைமையில் பயன்படுத்தும் டைப்ரைட்டர் விசைப்பலகை வடிவம் விண்டோஸில் இல்லை. எனவே இவ்வேளையிலேயே மூன்றாம் தரப்பு IME (Input Method Editors) கள் நமக்குப் பயன் தருகின்றன. இவை இயங்குதளத்தில் மேற்பகுதியிலிருந்து இயங்கு தளத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாது எமக்குத் தேவையான அல்லது எமக்குப் பரிச்சயமான விசைப்பலகை வடிவத்தைத் தெரிவு செய்து தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகின்றன. இதன் படி இயங்குதளத்தில் குறிப்பிட்ட விசைப்பலகை வடிவம் காணப்படாவிட்டாலும் இல் அதனைத் தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். எனவே பாமினி விசைப்பலகை வடிவம் விண்டோஸில் இல்லை. அதனால் தமிழில் யுனிக்கோட் எனக்குத் தெரிந்த முறையில் தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே எனது கணினியில் மூன்றாம் தரப்பு IME களில் NHM Writer ஏதாவதொன்றை நிறுவப் போகின்றேன்.
தமிழ் IME களின் பெயர்கள்
- அழகி
- NHM Writer
- Keyman
- Murasu Anjal
இவற்றுள் NHM Writer எனும் மென்பொருளை நிறுவப் போகின்றேன். https://kaladi.ai/ எனும் இணையத்தளத்திற்கு சென்று NHM Writer ஐ தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.
இலங்கைப் பாடசாலை பாடத்திட்டத்தில் தமிழ் யுனிக்கோட்
பின்னர் அதனை நாம் திறக்கின்ற போது அது Sytem Tray இல் வந்து அமர்ந்து கொள்ளும்.
அதன் பின்னர் அதற்குப் பக்கத்தில் மொழி உள்ளீடுகள் காட்டப்படும் இடத்தில் Click செய்து தமிழை தெரிவு செய்ய வேண்டும்.
பின்னர் நேரடியாக தமிழில் நாம் தட்டச்சு செய்ய முடியும். இம்முறையில் Standard Tamil Keyboard Layout எனப்படும் விசைப்பலகை வடிவமொன்று தரப்பட்டுள்ளது.
இம்முறையானது சிறிய மாற்றங்களுடன் பாமினியை ஒத்ததாக காணப்படுகிறது.
FAQ
ஆரம்பத்தில் சற்று பழக்கம் தேவை. ஆனால் Tamil 99 அல்லது Phonetic layout பயன்படுத்தினால் விரைவாக கற்றுக்கொள்ள முடியும்.
முடிவுரை :
இந்தக் கட்டுரையில் பாமினி தட்டச்சு முறை பற்றியும் அதனை நேரடியாக கணினியில் எவ்வாறு தட்டச்சு செய்யலாம் என்பத பற்றியும் ஏனைய தமிழ் விசைப்பலகை வடிவங்கள் பற்றியும் இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் காணப்படும் தமிழ் விசைப்பலகை வடிவம் பற்றியும் அறிந்து கொண்டோம். www.ulahavalam.com

.png)
.png)
.png)

.png)
.png)

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
%20-%20Copy.png)
.png)
.png)
.png)