பொதுச் சாதாரண பரீட்சை - வினாவிடை


 01. கடந்த வருடம் ஜனவரியில் கொழும்பிலிருந்து வடமாகாண பிரதேசமொன்றுக்கு அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. எந்தப் பிரதேசத்திற்கு அந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது?

காங்கேசன்துறை

02. உக்ரேனுடன் போரிட்டு வரும் நாட்டின் பெயர் யாது?

ரஷ்யா


03. 03. உலகில் அதிகமாக ஒலி மாசடையும் பிரதேசம் யாது?

டாக்கா ( பங்களாதேஸ்)


04. கடந்த வருடம் தென்கொரியாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் யார்?

yoon Suk-yeol


05. கடந்த வருடம் மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராகிய நாடு எது?

செக் குடியரசு


06. உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?

பெட்ரோஸ் கேப்ரியேசஸ் 


07. கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் யார்?

Ferdinand “Bongbong” Marcos Junior


 08. தலதா மாளிகை பெரஹராவின் புனித பேழையை 13 தடவைகள் தாங்கிச் சென்ற யானையொன்று கடந்த வருடம் மார்ச் மாதம் உயிரிழந்தது. பின்னர் அந்த யானையை தேசிய உடைமையாக  இலங்கை அரசு பிரகடனப்படுத்தியது. அந்த யானையின் பெயர் யாது?

நெதுங்கமுவ ராஜா


09. உலக ஊடக சுதந்திர சுட்டெண் வரிசையில் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது?

146

10. துருக்கி நாடு தன்னுடைய பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியது. துருக்கியின் புதிய பெயர் யாது?

துர்க்கியே (Turkiye)

11. ஆசியாவில் மிக நீளமான தந்தத்தையுடைய யானை கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தது. அந்த யானையின் பெயர் யாது?

போகேஸ்வரன் , கபினி

12. இந்தியாவின் திட்டமொன்றுக்கு எதிரான இந்திய வடமாநிலங்களில் போராட்டம் நிலவியது. அந்த திட்டத்தின் பெயர் யாது?

அக்னிபத் திட்டம்


13. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி வரிசையில் எத்தனையவது ஜனாதிபதியாவார்?

ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி


14. உலகளாவிய அச்சுறுத்தல் உள்ள நோயாக கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட நோயின் பெயர் யாது?

குரங்கம்மை (Monkeypox)


15. பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த சோவியத் ரஷ்யாவின் கடைசித் தலைவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். அவரின் பெயர் யாது?

மிக்கேய்ல் கோர்பச்சேவ் (Mikhail Gorbachev)


16. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கும் ஐக்கிய நாடுகள் சபையினால் சமாதானப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது. அந்த தலைவரின் பெயர் யாது? அவரின் நாடு யாது?

ஜேர்மனியின் முன்னாள் சான்சலர் அஞ்சலா மேர்கர் , ஜேர்மனி


17. ஐதரசன் சக்தியில் இயங்கும் ரயில் வண்டிகளின் சேவை கடந்த ஆகஸ்ட் மாதம் எந்த நாட்டில் ஆரம்பமாகியது?

ஜேர்மனி


18. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சமந்தா பவர் எந்த அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்?

ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகம்


19. கடந்த செப்டம்பர் மாதம் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் உயிரிழந்த யானையின் பெயர் யாது?

பந்துல


20. பிரித்தானியாவின் (ஐக்கிய இராச்சியத்தின்) தற்போதைய மன்னர் (முடி) யார்?

சார்ள்ஸ் III


21. கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் தலைவரின் பெயர் யாது?

தசுன் ஷானக


22. கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதி தோல்வியடைந்த அணி யாது?

பாக்கிஸ்தான்


23. கடந்த வருடம் ஆசியக் கிண்ணப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE)


24. கடந்த ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான Ales Bialiatski


25. ஐக்கிய இராச்சியத்தின் தற்போதைய பிரதமர் யார்?

ரிஷி சுனேக்


26. The Seven Moons of Maali Almeidaஎன்ற நூலின் ஆசிரியர் யார்?

ஷெஹான் கருணாதிலக


27. எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?

சவூதி அரேபியா

28. கடந்த வருடம் புக்கர் பரிசு வென்ற இலங்கை எழுத்தாளரின் பெயர் யாது?

ஷெஹான் கருணாதிலக

இந்தப் பக்கம் புதிய விடயங்களுடன் இற்றைப்படுத்தப்படும். மீண்டும் ஒரு முறை இந்தப் பக்கத்திற்கு வருகை தரவும். 

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய விடயங்கள் மாதாந்த அடிப்படையில் கீழேயுள்ள இணைப்புக்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தப் பக்கங்களுக்கும் சென்று பிரயோசனமடையுங்கள். 


ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்





pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022


கருத்துரையிடுக

புதியது பழையவை