உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் ஒரு கட்டமாக உலகின் மிகப் பெரிய விமானமாகக் கருதப்படும் Antonov An-225 Mriya ரஷ்யாவால் உக்ரேனில் வைத்து தாக்கப்பட்டது.
சூரிய சக்தி மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை Swiss Airlines நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.
ஈரானின் IRGC யினால் Noor - 2 எனப்படும் இராணுவ செய்மதியொன்று விண்ணுக்கு ஏவப்பட்டது.
ஹங்கேரி பாராளுவமன்றத்தினால் Katalin Novak அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடொன்று பெண் ஜனாதிபதியைக் கொண்டிருக்கின்றமை இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியாவின் ஜனாதிபதியாக Yoon Suk-yeol தெரிவு செய்யப்பட்டார். அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் மார்ச் 09 இல் நடைபெற்றது. எதிர்வரும் மே 10 இல் அவர் பதவியேற்பார்.
உலக அழகியாக (Miss World 2021) போலந்தைச் சேர்ந்த கரோலினா பைலவ்ஸ்கா (Karolina Bielawska) முடி சூடப்பட்டார்.
உலகின் அதிக ஒலி மாசடையும் பிரதேசமாக பங்களாதேசின் டாக்கா அறிவிக்கப்பட்டது.
மோல்டாவின் பிரதமர் ரொபர்ட் அபேலா (Robert Abela) மீண்டும் அந்நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |