AWS இன் புதிய AI முகவர்கள்


Amazon Web Service (AWS) நிறுவனமானது கடந்த செவ்வாய்க்கிழமையன்று Frontier Agents என்று அழைக்கப்படும் மூன்று புதிய செயற்கை நுண்ணறிவு முகவர்களை (AI Agents) அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மென்பொருள் உருவாக்கத்தில் பாரிய திருப்பத்தினை ஏற்படுத்த உள்ளன. இந்த முகவர்கள் ஒவ்வொன்றும் மென்பொருள் உருவாக்கத்தின்போது நடைபெறும் முக்கியமான மூன்று கட்டங்களில் (Code, Security Process, Automating DevOps Tasks) உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முகவர்களின் முன்னோட்ட (Preview) பாதிப்புகள் தற்போது கிடைக்கின்றன இந்த மூன்று முகவர்களைப் பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம். 


01) Kiro Autonomous Agent 

இந்த மூன்று முகவர்களில் மிகவும் முக்கியமானது Kiro Autonomous Agent எனப்படும் இந்த முகவராகும். இது மனிதர்களின் தலையீடு இல்லாமல் நீண்ட காலத்திற்கு வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிக்கலான பணி ஒன்றினை எடுத்து அதை எப்படி செய்து முடிப்பது என்பதை தானாகவே தீர்மானிக்கின்றது. அத்துடன் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் குழு எவ்வாறு செயல்படுகின்றது என்ன விடயங்களை பின்பற்றுகின்றது என்பதனை கற்றுக் கொண்டு அதற்கேற்ப குறியீட்டை (Coding) இது எழுதுகின்றது அதோடு இது தனது நினைவாற்றலை இழந்து தான் செய்ய வேண்டியதை மறந்து விடாது. குறியீடுகளை உருவாக்கும் போது மனிதர்களிடமிருந்து திருத்தம் அல்லது உறுதிப்படுத்தல்களை கேட்டு அதன் மூலம் குறியீட்டுத்தரங்களை உருவாக்குகின்றது.


Introducing Kiro autonomous agent - Kiro

Kiro Web Portal

02) AWS Security Agent

இந்த முகவரானது (Agent) குறியீடுகளை (Coding) எழுதும் போதே பாதுகாப்பு சிக்கல்களை அடையாளம் கண்டு அதனை திருத்துவதில் கவனம் செலுத்துகின்றது. அதாவது குறியீடுகள் (Coding) எழுதப்படும் போது அல்லது சோதிக்கப்படும் போதே அதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்களை இது கண்டறிகின்றது. அதனை கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய திருத்தங்களையும் இது தானாகவே வழங்குகின்றது.

03) AWS DevOps

உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளை பயன்படுத்துவதற்கு முன் (Live Push) ஏற்படும் சிக்கல்களை தடுப்பதற்கு இந்த முகவர் உதவுகின்றது புதிய குறியீட்டின் செயல் திறனையும் இது தானாகவே சோதிக்கிறது அத்தோடு உருவாக்கப்பட்ட மென்பொருளானது ஏனைய மென்பொருட்கள் வன்பொருட்கள் அல்லது ஏனைய மேக அமைப்புக்களுடன் (Cloud Settings) இது இணக்கமாக செயல்படுகின்றதா என்பதனையும் உறுதி செய்கின்றது. இது புதிய குறியீடு இயங்கும்போது ஏற்படும் செயல் இழப்புகளை தவிர்ப்பதற்கு உதவுகின்றது.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது AWS ன் இந்த முக்கியமான மூன்று முகவர்களும் மென்பொருள் உருவாக்கத்தின் போது காணப்படுகின்ற முக்கியமான மூன்று பகுதிகளான எழுதுதல் (Coding) பாதுகாத்தல் (Securing) மற்றும் நிலைப்படுத்துதல் (Stabilizing) ஆகியவற்றை தண்ணியக்கமான முறையில் செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளன

இந்த பதிவானது AWS சேவையின் முக்கியமான இந்த செயற்கை நுண்ணறிவு முகவர்களின் பற்றிய சிறிய அறிமுகத்தை வழங்கி இருக்கின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்களை இணையத்தில் நீங்கள் தேடிக்கொள்ள முடியும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை