உலகில் பல்வேறு சாதனைகள் தினந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பல்வேறு சாதனைகளை இவ்வாறு நிகழ்த்துகின்றனர்.
அந்த அடிப்படையில் அபுதாபியைச் சேர்ந்த சிறுவனொருவனின் சாதனை பற்றி இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. Saeed Rashed AlMheiri என்பது இந்தச் சிறுவனின் பெயர் . நான்கு வயதையுடையவன். The Elephant Saeed And The Bear எனும் புத்தகத்தை அண்மையில் இந்தச் சிறுவன் வெளியிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அன்பையும் இரண்டு விலங்குகளுக்கு இடையில் ஏற்படுகின்ற எதிர்பாராத நட்பையும் இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகின்றது. சுற்றுலா சென்ற யானையொன்று கரடியொன்றைச் சந்திக்கின்றது. கரடி தன்னை சாப்பிட்டு விடும் என்று யானை பயப்படுகின்றது அந்த யானை. எனினும் கரடி மீது அன்பை வெளிக்காட்டி இருவரும் சேர்ந்து சுற்றுலா போவோமா என்று கேட்கிறது அந்த யானை. பின்னர் இரண்டு விலங்குகளும் நண்பர்களாயின. இதுவே இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
1000 பிரதிகள் விற்று முடிந்த பின்னர் கடந்த மாதம் 09 ஆம் திகதி இந்தப் பையனது சாதனை கின்னஸினால் உறுதிப்படுத்தப்பட்டது. உலகின் இளம் வயதில் புத்தகம் வெளியிட்டவர் (ஆண்) என்ற அடிப்படையில் இவரது சாதனை கின்னஸில் இடம் பிடித்தது.
தனது சகோதரியால் ஈர்க்கப்பட்டே இவன் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளான்.அல்தாபிஎன்பவர் இவனது சகோதரியாவார். 08 வயதானவர். பல்மொழிப் புத்தகத் தொடரை வெளியிட்டவர் என்ற பெண்கள் பிரிவு சாதனையையும் இளவயதில் புத்தகத்தை வெளியிட்டவர் என்ற பெண்கள் பிரிவு சாதனையையும் இவர் நிலை நாட்டியிருந்தார். சிந்தனையாளராகவும் ஆக்கத்திறன் மிக்கவராகவும் நாட்டின் இளம் தொழில் முயற்சியாளராகவும் இவர் காணப்படுகின்றார்.
இந்த சிறுவர்களது சாதனை அனைவருக்கும் முன்மாதிரியாக அமைகின்றது. நாமும் எமது பிள்ளைகளை சாதனையாளர்களாக வளர்த்தெடுப்போம்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |