அதிக வெளிச்சமுள்ள தொலைபேசித் திரை



Samsung நிறுவனம் பல கண்டுபிடிப்புக்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் லாஸ்வேகாஸில் இடம் பெற்று வரும் CES 2023 கண்காட்சியில் புதிய வகை (Screen) திரையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் பொதுவாகப் பயன்படுத்தும் திறன்பேசிகளின் (Smart Phone) திரையின் வெளிச்சமானது (Brightness) 500 nits அளவிலிருந்து 1500 nits அளவுள்ளதாகக் காணப்படும். ஆனால் இந்தக் கண்காட்சியில் 2000 nits அளவுள்ள திறன்பேசியை Samsung அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தத் திரையானது UL (Underwrites Laboratories) இன் சான்றிதழையும்  UDR ( Ultra Dynamic Range,ultra-high dynamic range) இன் சான்றிதழையும் பெற்றுள்ளது. கீழேயுள்ள படத்தில் வழக்கமான திரையுடைய திறன்பேசியும் 2000 அளவுள்ள திறன்பேசியும் அருகருகே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இவ்வாறு அதிக வெளிச்சமான திரையை இது கொண்டிருப்பதால் அதிக வெளிச்சமுள்ள சூழ் நிலைகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும். அதிக வெளிச்சமுடைய திரையைக் கொண்டிருந்தாலும் இது மின்வலுவைக் குறைந்தளவே பெற்றுக்கொள்கின்றது. 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




 

Samsung 2000 nit ultra-high brightness OLED mobile phone screen, Samsung phone, Samsung display, Samsung, CES 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை