மெக்ஸிக்கோவின் தெற்கு எல்லை நகரான Juarez இல் சிறைச்சாலையில் (Cereso Number 3 state prison) ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகினர். இவர்களுள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 10 பேரும் நான்கு கைதிகளும் உள்ளடங்குவர்.இந்தத் தாக்குதலில்13 பேர் காயமடைந்ததோடு 24 கைதிகள் தப்பிச் சென்றதாகவும் அறிய முடிகின்றது. எனினும் தாக்குதலை நடாத்தியோர் யார் என்பது தெளிவாகவில்லை. தாக்குதல்தாரிகள் காலை 7 மணியளவில் சிறைச்சாலைக்கு வந்து தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சிறைச் சாலை தாக்குதலுக்கு முன்னர் நகரின் மற்றுமொரு பகுதியிலும் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. அந்தத் தாக்குதலை நடத்தியவர்களை பொலிஸார் விரட்டிச் சென்றதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதோடு ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டது.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Tags:
மெக்ஸிக்கோ