மனிதர்கள் ஒவ்வொருவரும் விலங்குகள் மீது இரக்கம் கொண்டவர்கள் தங்களது இரக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறுப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
அண்மையில் ஜப்பானில் ஒருவர் மிக வித்தியாசமான முறையில் தன்னுடைய விலங்குகள் மீதான இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3000000 யென் செலவு செய்து ஓநாய் போன்று தோற்றமுடைய ஆடையொன்றைத் தயார் செய்துள்ளார். தன்னுடைய சிறுவயதில் இருந்து தான் விலங்குகள் மீது அன்பு கொண்டவராக இருந்தவுடன் ஒரு நாள் தான் விலங்காக மாற வேண்டும் என்று கனவு கொண்டிருந்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். Zeppet என்ற நிறுவனமே இந்த ஆடையை தயார் செய்துள்ளது. . இந்த நிறுவனமானது இந்த ஆடையை தயார் செய்து முடிப்பதற்கு 50 நாட்கள் சென்றதாக அறிய முடிகின்றது.
தன்னை கண்ணாடியில் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் தன்னுடைய கனவு நிறைவேறிய தருணமாக உணர்ந்ததாகவும் இவர் குறிப்பிட்டு இருக்கின்றார். பின்னங்கால்களால் நடக்கின்ற ஓநாயாக இருக்க வேண்டும் என்கின்ற தன்னுடைய விருப்பமானது கடினமானதாக இருந்தாலும் அந்த விடயம் நிறைவேறி உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இதற்கு முன்னர் இந்த நிறுவனமானது நாயாக மாற விரும்பிய Toco என்பவருக்கும் ஒரு ஆடையை நிர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.