பிரேஸிலில் புதிய ஜனாதிபதி பதவியேற்பு


 பிரேஸிலின்  39 ஆவது ஜனாதிபதியாக Luiz Inacio Lula da Silva பதவியேற்றுக் கொண்டார். பிரேஸிலின் ஜனாதிபதியாக அவர் பதவியேற்பது இது மூன்றாவது தடவையாகும். இவர் 2003 இலிருந்து 2010 வரை பிரேஸிலின் ஜனாதிபதியாகக் கடமையாற்றினார். கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் Jair Bolsonaro வை இவர் தோற்கடித்திருந்தார். ஜனவரி 01 இல் காங்கிரஸில் வைத்து இவர் பதவிப் பிரமாணம் செய்தார். காங்கிரஸ_க்கு வருவதற்கு முன் பேரணியும் நடைபெற்றது. இதில் அதிகமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பயங்கரமான பாதிப்புகளுடன் (Terrible Ruins) இருக்கின்ற பிரேஸிலை கட்டியெழுப்ப இருப்பதாக இவர் தன்னுடைய உரையில் தெரிவித்தார். 

அதேவேளை பிரேஸிலின் முன்னாள் ஆட்சியாளர் Jair Bolsonaroவின் ஆதரவாளர்கள் இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் கூடி இராணுவப் புரட்சி நடத்தக் கோரிய சம்பவமும் இடம் பெற்றுள்ளது. பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி Jair Bolsonaro கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்குப் பிரயாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



கருத்துரையிடுக

புதியது பழையவை