அமெரிக்காவில் புதிய சபாநாயகர் தெரிவு


அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க காங்கிரஸிற்கான இடைத் தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றது. எனவே குடியரசுக் கட்சி புதிய சபாநாயகரையும் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. 

குடியரசுக் கட்சியின் சார்பில் கெவின் மெக்கார்த்தியும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹக்கிம் ஜெப்ரிஸ் யும் சபாநாயகர் பதவிக்காகப் போட்டியிட்டனர்.பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் 222 உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியின் 212 உறுப்பினர்களும் உள்ளனர். ஒருவர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுவதற்கு 218 ஆசனங்கள் தேவை. எனினும் கெவின் மெக்கார்த்தியின் குடியரசுக் கட்சியினரே அவருக்கு ஆதரவு வழங்காமல் இருந்தனர். சபாநாயகருக்கான தெரிவுகள் 14 முறை நடத்தப்பட்டது. இதில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. 

இறுதியில் நடந்த 15 ஆவது தெரிவிலேயே கெவின் மெக்கார்த்தி அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




 House of representative, kevin mccarthy speaker america

கருத்துரையிடுக

புதியது பழையவை