பொதுவாக சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அவர்கள் அடிமையாக நடத்தப்படுகின்றார்கள் என்று விமர்சிக்கப்படுவது உண்டு. ஆனால் அண்மையில் இணையத்தில் வலம் வந்த ஒரு காணொளியானதுனது சவூதி பெண்கள் சுதந்திரமாக தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்; அவர்கள் தங்களுக்குரிய தொழிலை செய்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை உலகிற்கு காட்டுகின்றது.
சவூதி புகையிரத சேவையானது ஒரு காணொளியை வெளியிட்டிருக்கின்றது. அந்தக் காணொளியில் பெண்மணியொருவர் ரயில் ஓட்டுவது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அந்தக் காணொளியில் குறித்த பெண்மணி மும்முரமாகப் பணி செய்யும் விதம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மக்காவுக்கும் மதினாவுக்கும் இடையிலான அதிவேக புகையிரத சேவையே இதுவாகும். உலகளாவிய ரீதியில் அதிவேகமான புகையிரதே சேவைகளுள் மக்காவுக்கும் மதினாவுக்கும் இடையிலான புகையிரத சேவையும் ஒன்றாகும். சுமார் 31 பெண்களுக்கு இரயில் ஓட்டும் பயிற்சி வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.
சவூதிப் பெண்மணியான ஸாரா அல் ஷெஹ்ரி குறிப்பிடுகையில் மத்திய கிழக்கில் முதன் முதலாக அதிவேக ரயில் ஓட்டுவதில் தானும் தனது குழுவும் இருப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இதுவொரு அதிக பொறுப்பு வாய்ந்த பணி. ஹஜ்ஜூக்காகவும் உம்ராவுக்காகவும் ஸியாரத்திற்காகவும் வருகை தரும் பயணிகளின் பாதுகாப்பு புகையிரத சாரதியின் பொறுப்பாகும் என்று ரயில் ஓட்டும் பயிற்சியை நிறைவு செய்த மற்றுமொரு பெண்மணியான நூரா ஹிஸாம் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |