கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற நகரங்களுள் பாதுக்க என்பதுவும் ஒன்றாகும். இது கொழும்பிலிருந்து 33 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது. இதனுடைய பெயர் எவ்வாறு உருவாகியது என்று பார்ப்போம்.
16ஆம் நூற்றாண்டளவில் சீதாவாக்க இராச்சியத்தின் முகாமாக பாதுக்க காணப்பட்டது. அக்காலத்தில் போர்த்துக்கேயருக்கும் சீதாவாக்கை இராச்சியத்திற்கும் இடையில் அடிக்கடி போர்கள் நடைபெறுவது வழக்கம். அப்படி நடைபெற்ற சிறிய போர் ஒன்றில் சீதாவாக்கைப் படையினரால் விரட்டப்பட்டு வந்து போர்த்துக்கேய வீரர்கள் தற்போது கலகெதர சந்தி அமைந்திருக்கின்ற இடத்தில் நாகை மரங்களின் கீழ் இளைப்பாறினர்.தங்களுடைய கவலைகள் இல்லாமலாகும் வரை அவர்கள் அவ்வாறு இளைப்பாறினார்கள். ஒரு விடயம் இல்லாமல் போவதை சிங்களத்தில் பஹ(පහ ) என்றும் கவலையை துக (දුක) என்றும் குறிப்பிடப்படும். எனவே மேற்கூறிய இரண்டு சொற்களும் இணைந்தே பாதுக்க (පාදුක්ක ) என்று பெயர் வந்தது.
பாதுக்க என்பதன் பெயர்க் காரணம் தொடர்பாக மேற்கூறிய வரலாற்றுச் சம்பவம் தவிர்ந்த ஏனைய சம்பவங்கள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் எமது உலகவலம் (www.ulahavalam.com) இணையத்தளத்திற்கு வருகை தந்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |