கரப்பான் எமது வீடுகளில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து எமக்கு தொல்லை தருவதுண்டு. எனவே இவற்றை அழிப்பதற்கு அல்லது விரட்டுவதற்கு காணப்படும் சில முறைகளை உங்களுடன் நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.
01. அப்பச் சோடா
Baking Soda எனப்படும் அப்பச் சோடாவை பாவித்து கரப்பான் பூச்சிகளை நாம் விரட்டலாம். அப்பச்சோடாவுடன் சீனியையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அந்தக் கலவையை கரப்பான் பூச்சிகள் புழங்கும் இடத்தில் தூவி விட வேண்டும். சீனியைத் தேடி வருகின்ற கரப்பான் பூச்சிகள் சீனி கலந்த அப்பச் சோடாவை உண்டு மரணமடைந்து விடும்.
02. வேப்பெண்ணை
கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்று வேப்பெண்ணையாகும். கரப்பான் பூச்சி வருகின்ற இடங்கில் வேப்பெண்ணையை தெளிக்க வேண்டும். வேப்பம் பூ தூளையும் கரப்பானை அழிப்பதற்காகப் பயன்படுத்த முடியும்.
03. மிளகு இலை எண்ணை (Paper Mint Oil)
மிளகு இலை எண்ணையையும் உப்புத் தண்ணீரையும் கரப்பான் பூச்சி வருகின்ற இடங்களில் தெளிப்பதன் மூலமும் அவற்றை விரட்ட முடியும்.
04. பிரியாணி இலை
பிரியாணி இலைகளை நொறுக்கி கரப்பான் பூச்சி வருகின்ற இடங்களில் தூவி அவற்றை விரட்ட முடியும். அத்துடன் பிரியாணி இலைகளை அவித்த தண்ணீரையும் கரப்பான் பூச்சி வருகின்ற இடங்களில் தெளித்து அவற்றை விரட்ட முடியும்.