உலகின் மிகப் பெறுமதியான மாம்பழங்கள்

 


உலகின் மிகப் பெறுமதியான மாம்பழத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். 

Miyazaki Mangoes என இந்த மாம்பழங்கள் அழைக்கப்படுகின்றன. ஜப்பானின் Miyazaki என்ற இடத்தைப் பூர்விகமாகக் கொண்டதால் இந்த மாம்பழங்கள் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன. Taiyo-no-Tomago என்றும் ஜப்பான் மொழியில் இது அழைக்கப்படுகிறது. 


சூடான காலநிலையும் நீண்ட நேர சூரிய ஒளியிலும் இது நன்றாக வளரக் கூடியது. பழுக்கின்ற போது இம்மாம்பழங்கள் ஊதா நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகின்றன. சிவப்பு நிறத்தில் இருப்பதால் ட்ராகனின் முட்டை (Eggs of Dragon) என்றும் இவை அழைக்கப்படுகின்றன. 


இந்தியா, பங்களாதேஸ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தற்காலத்தில் இது கிடைக்கின்றது. 

பொதுவாக இந்த மாம்பழங்கள் 350 கிராமுக்கும் அதிகமான நிறையைக் கொண்டிருக்கின்றன. 

ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் காலப்பகுதியில் இவை காய்க்கின்றன.

ஒவ்வொரு மாம்பழமும் அண்ணளவாக 50 டொலர்கள் பெறுமதியானவை. 


இதனுடைய சிவந்த நிறமும் வடிவமைப்பும் காரணமாக இது Eggs of Sunshine என்றும் அழைக்கப்படுகின்றது.



ஆங்கில இணையத்தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை