நீங்கள் சாரதியில்லாத காரொன்றில் பயணம் செய்ய ஆசைப்படுகின்றீர்களா? உங்களுக்கென்றே அடுத்த வருடம் வர இருக்கிறது Baidu வின் இலத்திரனியல் கார்.
Baidu என்பது சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். இதன் கிளை நிறுவனம் Jidu Auto ஆகும். Jidu Auto இன்று ரோபோ கார் ஒன்றினை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கார் முழுமையாக குரல் வழி மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடியது. சுயமாக ஓட்டக் கூடிய மென்பொருளை கொண்டுள்ள இது 12 கமெராக்களையும் 2 Lidar (Light Detection and Ranging) கருவிகளையும் கொண்டுள்ளது. Lidar எனப்படுவது லேசர் ஒளிக் கற்றையினை பயன்படுத்தி முன்னாலுள்ள பொருட்களை உணரும் ஒரு வகையான தொழில் நுட்பமாகும்.இந்தக் காரினுடைய பெறுமதி 29914 டொலர்களாகும்.
இந்தக் கார் வேண்டுமென்றால் இப்போதிருந்தே டொலரை சேமிக்கத் தொடங்குங்கள்.