வயிற்றில் மாமிச உணவுடன் கூடிய டைனோசர் கண்டுபிடிப்பு


120 மில்லியன் ஆண்டுகள் பழைமையான மாமிசம் உண்ணும் டைனோசர் வகையொன்றின் எச்சங்கள் ஆராய்ச்சியாளரான ( Paleontologist) McGill பல்கலைக்கழக பேராசிரியர் Hans Larsson என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது Microraptor zhaoinus எனும் வகை டைனோசர் இனமொன்றாகும். இது மாமிச உண்ணி (Carnivorous) என்றும் பறவை போன்ற வடிவமுடையது (Bird- like) என்றும் McGill பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வயிற்றில் உணவுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் எச்சங்கள் 21 இல் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைனோசரை ஆராய்ந்த போதே இதனுள் பாலூட்டி ஒன்றின் கால் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இது பாலூட்டிகள், மீன்கள், பறவைகள், பல்லிகள் போன்றவற்றை உண்டிருக்கலாம் என்று McGill பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்






கருத்துரையிடுக

புதியது பழையவை