செவ்வாயில் ஒட்சிசன் தயாரித்தது நாசா


செவ்வாயில் உயிர் இருக்கிறதா? தண்ணீர் இருக்கிறதா என ஆய்வுகள் நடந்து வருகின்றமை நாம் அறிந்த விடயமே. அந்த வகையில் செவ்வாயில் ஒட்சிசனைத் தயாரிப்பதற்கான முயற்சியை நாசா நிறுவனம் கடந்த வருடம் ஆரம்பித்திருந்தது. 



MOXIE ( Mars Oxygen In-Situ Resource Utilization Experiment) எனப்படுவது செவ்வாய்க் கோளில் ஒட்சிசனை தயாரிப்பதற்காக செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு கருவியாகும். கடந்த வருடம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Perseverance விண்கலத்தில் இது பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலம் ஒரு விண்வெளி வீரரினால்100 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்குத் தேவையான ஒட்சிசனை உருவாக்க முடியும்.

 




கடந்த 2021 இல் இந்தக் கருவி மேற்குறிப்பிட்ட அளவிலான ஒட்சிசனைத் தயாரித்தது. தொடர்ச்சியான 7 மணித்தியால  உற்பத்திச் செயற்பாட்டின் மூலம் 15 நிமிடங்களுக்குத் தேவையான ஒட்சிசனை ஒரு மணித்தியாலத்தில் இந்தக் கருவியின் மூலம் உற்பத்தி செய்ய முடிந்திருக்கின்றது. 




இந்தக் கருவியானது செவ்வாய் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி எடுத்து அதிலிருந்து ஒட்சிசனைத் தயாரிக்கின்றது. 



நாசா நிறுவனமானது இந்த கருவியைப் போல் பெரிய கருவியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை