கி.பி 380 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சவூதியின் மரபுரிமை ஆணையகம் அறிவித்துள்ளது. இந்தக் கல்வெட்டானது நஜ்ரான் பிரதேசத்தின் அல் ஹகம் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டானது இது வரை கண்டுபிடிக்கபட்டுள்ள கல்வெட்டுக்களில் காலத்தினடிப்படையில் ஆறாவது பழைமை வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கஅப் பின் அம்ர் பின் அப்த் மனத் ( Ka'b bin Amr bin Abd Manat) என்ற பெயரையுடைய அரேபிய வர்த்தகரொருவர் அரேபியத் தீபகற்பத்தின் வடமேற்குத் திசையிலிருந்து தனது வீட்டிற்கு வரும் வழியில் இந்தக் கல்வெட்டை எழுதியுள்ளார். இந்தக் கல்வெட்டு எழுதப்பட்ட திகதியானது Nabataea(வட அரேபியாவில் 2000 வருடங்களுக்கு முன் நிலவிய நாகரிகம்) நாட்காட்டியின் குறியீடுகளுடனும் இலக்கங்களுடனும் எழுதப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது.
இஸ்லாத்திற்கு முந்தைய அறபு மொழி பற்றிய ஆய்வுகளுக்கு இந்தக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு உதவும் எனத் தெரிகிறது.
இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நஜ்ரானின் ஹிமா கலாசாரப் பிரதேசமானது அதிகளவிலான புராதன கல்வெட்டுக்களையும் புதைகுழிகளையும் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.
யுனெஸ்கோவின் உலக கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளதோடு நஜ்ரான் பிரதேசத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் பிரதேசமாகவும் இந்த ஹிமா கலாசார பிரதேசம் காணப்படுகின்றது.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
பொது அறிவு,போட்டிப் பரீட்சை வழிகாட்டி, General Knowledge Tamil, GK Tamil, Current Affairs Tamil
Tags:
சவுதி அரேபியா