Current Affairs Tamil May 2023

 


இலங்கைப் பாடகர் டோனி ஹசன் தனது 73 ஆவது வயதில் காலமானார். 

இலங்கைப் பாடகர் கிறிஸ்தோபர் போல் தனது 87 ஆவது வயதில் காலமானார். 

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா தெரிவு செய்யப்பட்டார். இவர் எதிர் வரும் 5 வருடங்களுக்கு உலக வங்கியின் தலைவராகத் தொழிற்படுவார். 

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய CEO ஆக லிண்டா யாக்கரினோ என்பவர் எலான் மஸ்கினால் நியமனம் செய்யப்பட்டார். 

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடி சூட்டு விழா லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்றது. இருநூறுக்கு மேற்பட்ட அரச தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். 

பங்களாதேஷ், மியன்மார் கரையோரப்பகுதிகளை மோக்கா சூறாவளி தாக்கியது. 

அரபு லீக் அமைப்பில் சிரியாவை மீண்டும் சேர்ப்பதற்கு அதன் உறுப்பு நாடுகள் இணங்கின. 

இந்தியாவில் இரண்டாயிரம் ரூபா நாணயத் தாள்கள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.

ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார். 

நேபாளத்தைச் சேர்ந்த 53 வயதாகும் காமி ரீட்டா ஷெர்பா 27 ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். 

சாரதியில்லாத அதிவேக ஆகாய ரயிலின் ஒத்திகையை சீனா நடாத்தியது. 

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் ஜனாதிபதி தையுப் எர்துகான் வெற்றியீட்டினார். ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முதலாவது சுற்றுத் தேர்தலில் எவரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மொகா (Mocha) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு உதவ 'Operation Karuna" எனும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது. 

செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் Gigachat எனும் தொழில்நுட்பத்தை ரஷ்யா ஆரம்பித்தது. 

சீனாவினால் தயாரிக்கப்பட்ட அதன் முதல் பயணிகள் விமானமான C919 தனது முதலாவது பயணத்தைத் தொடங்கியது.

சீனாவின் Shenzhou-16 விண்கலம் மூலம் சீன விண்வெளி நிலையத்திற்கு மூன்று பேர் பிரயாணம் செய்தனர். 

மே 2023 இற்கான மாதாந்த செய்தித் தொகுப்பை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்தவும். 


நிகழ்நிலையில் (Online) சிறிய (Micro Works) வேலைகளைச் செய்து டொலரில் சம்பாதிக்க வேண்டுமானால் கீழே உள்ள இணைப்பைக் செய்து Clickworkers.comஇற்குள் உள் நுழையுங்கள்.  
www.clickworker.com

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்









பொது அறிவு,போட்டிப் பரீட்சை வழிகாட்டி, General Knowledge Tamil, GK Tamil, Current Affairs Tamil

கருத்துரையிடுக

புதியது பழையவை