விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்றைய சமூகம் பல்வேறுபட்ட நன்மைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளதை நாம் பல நூல்களை வாசித்து அறிந்து கொள்கின்றோம்.
அன்றைய கால மனிதன் கல்லையும் கல்லையும் உராய்ந்து தீயை கண்டுபிடித்தான்.
அன்று தொடக்கம் இன்று வரையிலும் விஞ்ஞானம் உலகளாவிய ரீதியில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மருத்துவத்துறை, தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை, விவசாயத்துறை போன்ற இன்னும் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் மனிதன் அவனது எல்லா நடவடிக்கைகளையும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றான்.
விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய சமூகம் நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவற்றை குணப்படுத்துவதற்கும் விஞ்ஞான உபகரணங்களை பயன்படுத்துகிறது. இதன் மூலம் இறப்பு வீதம் குறைவடைகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர துணை புரிகிறது. இன்றைய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்துள்ளதை அவதானிக்கலாம். மனிதன் தனக்கு முடியாத வேலைகளையும் தேவைகளையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்கிறான். மற்றும் பணத்தை சேமிக்கவும் கற்றுக் கொள்கிறான். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு பல நன்மைகள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனிதன் வானில் பறக்கும் பறவைகளைக் கண்டு விமானங்களையும் உருவாக்கினான்.
உலோகங்களை பயன்படுத்தி ஆபரணங்கள் ஆயுதங்கள் உபகரணங்கள் போன்றவைகளை உருவாக்கினான். பல வடிவங்களில் கட்டடங்களை அமைத்தான். புதிய புதிய பாதை வடிவங்களை உருவாக்கினான். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.
மேலும் கிரேக்கர், சீனர், அரேபியர் போன்றோர் அன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் உதவினர் கொப்பனிகஸ், அரிஸ்டோட்டில் கெப்லர், லியனடோ டாவின்ஸி, அலி இப்னு ஸீனா (avicenna) போன்ற பல அறிஞர்கள் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்.
அவர்களின் முயற்சியாலும் முன்னேற்றத்தாலும் அன்றைய விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது. இன்றைய மனிதன் அவற்றைக் கொண்டு பாரிய நன்மைகளை அடைந்து கொண்டிருக்கின்றான் என்பது மறக்க முடியாத உண்மையாகும். விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய சமூகம் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எம்.ஆர். எப். இப்ராதரம் 7Fகே/மா/வ/பதூரியா தேசிய பாடசாலைமாவனல்லை
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |