புர்கினோ பசோவில் ஆட்சி மாற்றம்.


ஆப்பிரிக்க நாடான புர்கினோ பசோவில் நேற்று வெள்ளிக் கிழமை ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தொலைக்காட்சியில் தோன்றிய இராணுவத் தளபதி Ibrahim Traore அந்நாட்டு ஆட்சியாளரான லெப்டினன் கேணல் Paul-Henri Damiba பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். போராளிகளை சரியான முறையில் கையாளாகாமைதான் இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரியில் லெப்டினன் கேணல் Paul-Henri Damibaதலைமையிலான இராணுவக் குழு ஆட்சியைக் கைப்பற்றியது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்த அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியே  லெப்டினன் கேணல் Damiba அந்த அரசாங்கத்தை பதவி கவிழ்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Damiba

எனினும் லெப்டினன் கேணல் Paul-Henri Damibaவின் அரசாங்கமும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் லெப்டினன் கேணல் Paul-Henri Damiba எங்கிருக்கின்றார் எனத் தெரியவில்லை. இடைக்காலத் தலைவராக இராணுவத் தளபதி Ibrahim Traore கடமையாற்றுகின்றார். 

நடைபெறும் விடயங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

 முன்னைய மாதங்களுக்கான செய்தித் தொகுப்புக்களை அறிய கீழே உள்ள இணைப்புக்களை Click செய்யுங்கள். 

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022







கருத்துரையிடுக

புதியது பழையவை