Mandous புயல்




வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள அமுக்கமானது கடந்த ஆறு மணிநேரத்தில் மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்துள்ளது. இந்த அமுக்கமானது புயலாக மாறி 65-75 கிலோமீற்றர் வேகத்தில் இது இந்தியாவின் புதுச்சேரிக்கும் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்குமிடையில் டிசம்பர் 09 நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. என்ற பெயரை ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவு செய்தது. Mandou என்பதன் கருத்து புதையல் பெட்டி (Treasure Box ) என்பதாகும். 

சென்னைக்கு 580 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த அமுக்கம் தற்போது காணப்படுகிறது. சென்னையின் சில பகுதிகளில் சிறியளவிலான மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் பல பாகங்களில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. சில பிரதேசங்களில் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடற் பகுதிகளும் வழக்கத்தை விட சீற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது. 

இந்தியாவின் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை Mandous புயலின் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் புதுச்சேரியில் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் காற்றின் மாசு அளவும் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. 

உங்கள் பிரதேசத்தில் இந்தப் புயலின் தாக்கத்தை எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை எமது இணையத்தளத்தில் பகிருங்கள்.


Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்





மென்டோஸ், மாண்டஸ்,மெண்டோஷ்,மென்டோஷ், மான்டஸ், Mandous, Cyclone Mandous

கருத்துரையிடுக

புதியது பழையவை