உலகின் அதி குள்ளமான நபர்


உலகின் அதி குள்ளமான நபராக ஈரானைச் சேர்ந்த Afshin Esmaeil Ghaderzadeh என்பவர் கின்னஸினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 65.24 சென்ரி மீற்றர் (2 அடியும் 1.6 அங்குலமும்)  உயரம் கொண்ட இவர் முன்னாள் குள்ளமான நபரான கொலம்பியாவைச் சேர்ந்த  Edward "Niño" Hernandez என்பவரை விட 7 சென்ரி மீற்றர் உயரம் குறைந்தவராவார். இவர் பிறந்த போது இவரது உடல் நிலை 700 கிராம் ஆகும். தற்போது 6.5 கிலோவாக அது காணப்படுகின்றது.

கின்னஸ் நிறுவனத்தின் டுபாய் அலுவலகத்தில் வைத்து ஒரு நாளுக்குள் 3 முறை இவரது உயரம் அளவிடப்பட்டது. உலகின் உயரமான கட்டடமான பேர்ஜ் கலிபாவுக்கும் இவர் இதன் போது விஜயம் செய்தார்.

 அப்ஸின் தன்னுடைய உயரம் காரணமாக தனது கல்வியையும் கைவிட நேர்ந்தது.  எனினும் அண்மைக்காலத்தில் தான் தன்னுடைய பெயரை இவர் எழுதப் பழகி இருக்கின்றார். 


நவீன தொலைபேசியைப் பாவிக்கும் முறையையும் பழகியிருக்கின்றார். நீண்ட நேரம் தொலைபேசியைப் பயன்படுத்துவது கடினமானதாக இருந்தாலும் அதனை சமாளித்துக் கொள்வதாகவும் இவர் கூறுகிறார். தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தனது Instagram followers உடன் தொடர்பு கொண்டு வருகின்றார் இவர். @mohamadghaderzadeh_official.என்பது இவரது Instagram முகவரியாகும். 


இவருடைய உயரம் காரணமாக இவரால் எந்தத் தொழிலையும் செய்ய முடியவில்லை. இவருக்குரிய செலவுகளை இவருடைய குடும்பத்தால் வழங்குவதற்கு சில நேரம் இயலாமல் இருக்கின்றது. இவருடைய நாள் அதிகமாக Cartoon பார்ப்பதிலேயே செலவாகின்றது. இவருக்குப் பிடித்தமான Cartoon Tom and Jerryயாகும். 

எந்த வித விளையாட்டிலும் இவர் ஈடுபடாவிட்டாலும் இவருக்கு நடனமாடப் பிடிக்கும். ஈரானிய குர்தீஷ் இசைக்கேற்ப நடனமாட இவர் விரும்புகிறார்.  


எனினும் உதைப்பந்துப் போட்டிகளை பார்ப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒன்றாகும். இவருக்குப் பிடித்த உதைப்பந்து அணி ஈரானிலுள்ள Esteghlal Football Club எனும் அணியாகும். இவருக்குப் பிடித்தமான உதைப்பந்து வீரர்களாக போர்த்துக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஈரானைச் சேர்ந்த Ali Daeiயும் காணப்படுகின்றார்கள்.

அப்ஸின் இரக்க குணம் கொண்டவர். உள்ளுரில் மிகப் பிரபலமானவர். பெற்றோரும் ஊரவர்களும் இவரை 'முஹம்மத்' என அழைக்கின்றனர். இவரால் தனியாக நடமாட முடிந்தாலும் சிலவேளைகளில் இவருக்கு பெற்றோர்களின் உதவி தேவைப்படுகிறது. 'தன்னுடைய நோக்கம் தனது பெற்றோருக்கு உதவுவதே. தன்னுடைய உலக அங்கீகாரம் அந்த நோக்கத்தை நிறைவு செய்யும்' என்று நம்புகின்றார் இவர். இவருடைய நோக்கம் நிறைவேற நாமும் பிரார்த்திப்போம். 



 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்






கருத்துரையிடுக

புதியது பழையவை