கொரோனா வைரஸின் தாக்கத்தை அடுத்து சீனாவில் பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் வெளிநாட்டுப் பிரயாணிகள் சீனாவுக்குள் உள்நுழைவதாயின் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடாகும். வெளிநாட்டுப் பிரயாணிகள் மூன்று மாதங்கள் கட்டாயமான தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 2020 மார்ச் மாதத்தில் இருந்து இந்தக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
சீனா தற்போது கொரோனா கட்டுப்பாடுகளைக் குறைத்து வருகின்றது. தற்போது வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கான தனிமைப்படுத்தல் 05 நாட்களாகக் காணப்படுகிறது. அந்தக் கட்டுப்பாடும் எதிர்வரும் ஜனவரியில் குறைக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி 08 இலிருந்து வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் இல்லை என்ற அறிவித்தலை விடுத்துள்ளது.
சீனாவில் காணப்படும் கொவிட் தொடர்பான தரவுகள் தற்போது வெளியிடப்படுவதில்லை. இருந்தாலும் கொவிட் காரணமாக ஒவ்வொரு நாளும் அதிகமானோர் இறப்பதாக நம்பப்படுகிறது.