1966 ஆம் ஆண்டு இலண்டனில் அமைந்திருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் (Westminster Central Hall) நடைபெற்ற முத்திரைக் கண்காட்சியில் உலகக் கிண்ணமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் காவலர்களும் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். கண்காட்சி நேரம் முழுவதும் அதனைக் காவல் காப்பது அவர்களின் கடமையாக இருந்தது. கண்காட்சியின் இரண்டாம் நாள் கண்காட்சி மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் தேவாலய ஆராதனை ஒன்று நடைபெற்றது. அதனால் அன்று சனக் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மதிய நேரம் வந்து பார்த்த போதுஅந்தக் கட்டடத்தின் பின்பகுதி உடைக்கப்பட்டிருந்தது. கிண்ணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் உடைக்கப்பட்டு கிண்ணம் களவாடப்பட்டிருந்தது.
![]() |
அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த Jules Rimet Trophy எனும் பெயர் கொண்ட கிண்ணம் |
-
மூன்று நாட்கள் கழித்து கப்பம் கோரி ஒரு கடிதம் ஒன்று உதைப்பந்து சம்மேளனத்திற்கு வந்தது. போலிப் பணத்தினை ஏற்பாடு செய்த உளவுத் துறை Edward Bletchley என்பவனைப் பிடித்தது. எனினும் அவனிடம் கிண்ணம் இருக்கவில்லை. ஏழு நாட்கள் கழித்து David Corbett என்பவருடைய வீட்டுப் பூங்காவில் (Hedge) செய்திப் பத்திரிகையினால் சுற்றப்பட்டுக் கிடந்த கிண்ணத்தை அவருடைய நாய் (Collie Dog) கண்டு அவருக்கு எத்திவைத்தது.
![]() |
திருடப்பட்ட கிண்ணத்தைக் கண்டெடுத்த Pickles எனும் பெயர் கொண்ட நாய் |
அதன் பின்னர் அந்த நாயும் அதன் உரிமையாளரும் பிரபலமாகினர். அதே ஆண்டு இங்கிலாந்து உலக உதைப் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக் கொண்டாட்ட விருந்துகளுக்கு இருவரும் அழைக்கப்பட்டனர்.
1983ஆம் ஆண்டும் உதைப்பந்துக் கிண்ணம் குழுவொன்றினால் பிரேசிலில் வைத்து களவாடப்பட்டது. இது தொடர்பான விடயங்களை மற்றமொரு பதிவில் பார்ப்போம்.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |