கட்டார் போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ள நவீன தொழில்நுட்பங்கள்


இம்முறை  பீபாவின் உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் கட்டாரில் நாளை ஆரம்பமாக இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ள நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.

01. அல் ரிஹ்லா : உத்தியோகபூர்வ கால்பந்து (Al Rihla)
Adidas நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பந்துகளே பீபா போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பந்துகளினுள்ளே உணரிகள் (Sencors) காணப்படுகின்றது. அவை Peak Game Speedடை அடையாளம் காண உதவுகின்றன.


02. Semi Automated Offside technology
Offside சம்மந்தப்பட்ட முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுப்பதற்காக இந்த முறைமை முதன் முதலாக கட்டார் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பமானது அரங்கின் கூரையின் கீழ் பொருத்தப்பட்டுள்ள 12 Tracking Cameraக்களையும் ஒவ்வொரு வீரர் சம்மந்தமான 29 தரவுப் புள்ளிகளையும் (Data Points) உணரிகள் (Sensors) பொருத்தப்பட்டுள்ள அல் ரிஹ்லா கால்பந்தையும் பயன்படுத்துகின்றது. OffSideஇற்கு பந்து சென்றால் மைதானத்தினுள் பொருத்தப்பட்டுள்ள12 Tracking Cameraக்களின் மூலமும் பந்தின் மூலமும் Video Assistant Refree யிற்கு எச்சரிக்கை (Alert)  செய்யும் விதத்தில் இந்த முறைமை தொழிற்படுகிறது.



03. விசேட செயலி (Fifa Player App)
இந்த செயலியின் மூலம் வீரர்களின் இயங்கு திறனை அறிந்து கொள்ள முடிவதோடு பல்வேறுபட்ட ஆய்வுகளை செய்ய முடியும். ஒவ்வொரு போட்டி முடிவடைந்து சிறிது நேரத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது செயற்றிறனை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்.  Line Breaking Events, Phase of Play போன்றவற்றை அறிந்து கொள்ள  முடியும். இன்னும் பல விடயங்களை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். 



04. பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான வசதிகள்
பார்வைக் குறைபாடுடையவர்களும் மற்றவர்கள் போல் போட்டியில் நடைபெறும் விடயங்களை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டார் உதைப்பந்தின் ஆரம்ப நிகழ்வுகள், இறுதி நிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் பார்வைக் குறைபாடுடையவர்களுக்காக நேரலையாக வர்ணனை ( audio-descriptive commentary) செய்யப்படவுள்ளன. ஹமாத் பின் கலிபா பல்கலைக் கழகத்தின் மனிதாபிமான சமூக விஞ்ஞான கல்லூரியின் முதுகலை ( Master of Arts in Audiovisual Translation Program)மாணவர்களால் இந்த நேரலை செய்யப்படவிருக்கின்றது. கட்டார் பவுண்டேசன் (Qatar Foundation) இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது. மேற்குறிப்பிட்ட கற்கை நெறியின் இரண்டு மாணவர்கள் அரபு மொழியிலும்  இரண்டு மாணவர்கள் ஆங்கில மொழியிலும் வரணனை செய்யவுள்ளனர்.  

Bonocle, Feelix போன்ற நிறுவனங்களும் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு உதவும் வகையில் பீபாவுடன் கைகோர்த்துள்ளன. ப்ரெய்லி முறையில் தகவல்களைப் பரிமாறும் வகையிலான கருவிகளை அவை ஏற்பாடுசெய்துள்ளன. 
Feelix palm

Bonocle


05. குளிர்மைப்படுத்தப்பட்ட அரங்குகள்
மொத்தமாக எட்டு அரங்கங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஏழு அரங்கங்கள் குளிர்மைப்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. பார்வையாளர்களைக் குளிர்மைப்படுத்தும் வகையில் இருக்கைகளின் கீழும் மைதானத்தைக் குளிர்மைப்படுத்தி வீரர்களுக்கு உதவும் வகையில் மைதானத்தை நோக்கியும் குளிர்மைப்படுத்தும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 



Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்




கருத்துரையிடுக

புதியது பழையவை