எனினும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கிருஷ்ணன் தம்பதியினர் Club House இல் நடத்திய நேர்காணலில் எலான் மஸ்க் கலந்து கொண்டமை அனைவரது கவனத்தைப் பெற்றது. குறித்து உரையாடல் அறையில் (Chat Room) சில நிமிடங்களுக்குள்ளேயே 5000 பேர் அந்த உரையாடலைக் கேட்பதற்காக பங்கு கொண்டனர். அந்த உரையாடலில் எலான் மஸ்க் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்க்கை, வேற்றுக் கிரகவாசிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் சம்மந்தமாக கருத்துக் கூறியிருந்தார்.
ஸ்ரீ ராம் கிருஷ்ணன் சென்னையில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் பொறியியலாளராக வர வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருந்தார். எனினும் தனக்குத் தேவையான கணினியை மிகவும் கஷ்டப்பட்டு வாங்கினார். எனினும் அவர் கற்பதற்கான இணைய இணைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே புத்தகங்களை வாங்கி மென்பொருள் சம்மந்தமாகப் படித்தார். ஒவ்வொரு இரவிலும் கடுமையாகப் படித்தார்.
2007 இல் அமெரிக்காவுக்குச் சென்ற ராம் கிருஷ்ணன் மைக்ரோசொப்டில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் Microsoft, Yahoo, Snap, Facebook போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றினார்.
2017 இல் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |