சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஆரம்பம் : Artemis 1


சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முதற் கட்டமாக நாசா நிறுவனம் புதிய விண்கலமொன்றை விண்ணுக்கு ஏவியது. Orian என்று பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த விண்கலமானது SLS எனப்படும் ரொக்கட் மூலம் கென்னடி விண் தளத்திலிருந்து இன்று ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாத இந்த விண்கலத்தில் Campos, Helga, Zohar எனப் பெயரிடப்பட்டுள்ள மனித மாதிரிகள் (Manikins) வைத்து அனுப்பப்பட்டன. 


பூமியிலிருந்து 280000 மைல் தூரம் இது பிரயாணம் செய்ய இருக்கின்ற இந்த விண்கலமானது சந்திரனையும் சுற்றி வர இருக்கின்றது. Orian விண்கலமானது தன்னுடைய பயணத்தில் சிறியளவிலான செயற்கைக் கோள்களையும் (CubeSats) கொண்டு சென்று விண்வெளியில் நிலைநிறுத்தவுள்ளது. Orion விண்கலமானது தானாக இயங்கக் கூடியதாக இருப்பதோடு மனிதனால் இயக்கக் கூடியதாகவும் உள்ளது.  

30 நாட்களுக்கு அதிகமான தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின் இந்த விண்கலமானது பரசூட்களின் உதவியுடன் சன்டியாகோ கடலில் விழும் என்று கூறப்படுகிறது. 


இந்த விண்கலமானது கடந்த ஆகஸ்ட் கடைசிப் பகுதியில் விண்ணுக்கு ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. SLS இல் ஏற்பட்ட சேதம் மற்றும் Nicole புயல் போன்ற காரணங்களால் இந்த ரொக்கட்டை விண்ணுக்கு ஏவும் நேரம் தாமதமாகியது. 

2024 இல் மனிதர்களுடன் கூடிய விண்கலம் சந்திரனைச் சுற்றி வரும்.  அதனைத் தொடர்ந்து Artemis 3 ஆனது 2025 ஆம் ஆண்டளவில் சந்திரத் தரைக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகின்றது. 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 

குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்






Tags : Nasa, Artemis 1, Moon

கருத்துரையிடுக

புதியது பழையவை