உரோமிலிருந்து 160கிலோமீற்றர் தொலைவிலுள்ள San Casciano dei Bagni நகரிலுள்ள புராதன குளியலறையின் சேறு நிறைந்த இடிபாடுகளுக்கிடையிலிருந்து இத்தாலிய ஆராய்ச்சியாளர்களால் 24 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உரோம நாகரிகத்திற்குச் சொந்தமான இந்த சிலைகள் Hygieia, Apollo போன்ற கடவுள்களையும் ஏனைய கிரேக்க உரோம கடவுள்களையும் பிரதிபலிக்கின்றன. 6000 வெண்கல, வெள்ளி மற்றும் தங்க நாணயங்களுடன் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமயச் சடங்கொன்றிற்காக இவை தண்ணீரில் மூழ்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த சிலைகளை தோண்டி கண்டுபிடித்த குழுவின் தலைவரான Jacopo Tabolli தெரிவித்தார்.
இந்த சிலைகள் ஆய்வு கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் விலுள்ள நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அறியக்கிடைக்கிறது.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |