மீண்டும் வருகிறார் டொனால்ட் ட்ரம்ப்.வாக்கெடுப்பில் வெற்றியா?


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளமான ட்விட்டரில் 88 மில்லியன் பின் தொடர்பவர்களைக் (Followers) கொண்டிருந்தார். எனினும் கடந்த 2021 ஜனவரியில் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டார். டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்து வந்த ட்விட்டர் 2020 ஜனவரி 06 இல் Capitol கட்டடம் மீதான ட்ரம்பின் ஆதரவாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டார்.

டொனால்ட் ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் இணைப்பதற்கான கருத்துக் கணிப்பொன்றை ட்விட்டரின் உரிமையாளரும் CEO வுமான எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். இதில் 15 மில்லியன் ட்விட்டர் பயனாளர்கள் கலந்து கொண்டனர். ட்ரம்புக்கு ஆதரவாக 51.8 சதவீத வாக்குகளும் எதிராக 48.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

எதிர்வரும் 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்




கருத்துரையிடுக

புதியது பழையவை