பூமியில் தண்ணீர் எவ்வாறு உருவாகியது? புதிய ஆராய்ச்சி முடிவுகள்.


பூமியில் தண்ணீர் எவ்வாறு உருவாகியது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக புதிய முடிவுகளை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 


கடந்த 2021 பெப்ரவரி 28 அன்று வட இங்கிலாந்தின் Winchcombe நகரத்தில்  வானத்தில் ஒளிர்ந்து கொண்டு பூமியை நோக்கி வந்த பொருள் ஒன்றை அதிகமானோர் அவதானித்தனர். பல மணி தேடலுக்துப் பின்னர் அந்தப் பொருள் விழுந்த இடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அது உதைப்பந்து  அளவிலான விண்கல் ஒன்றாகும். Winchcombe இல் தம்பதியொன்று வசித்து வந்த வீட்டின் வாகனப் பாதையில் அந்த விண்கல் விழுந்திருந்தது. 





Winchcombe இலிருந்தும் ஏனைய இடங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட 530 கிராம் எடையுள்ள விண்கல் துகள்களிலிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை வெப்பப்படுத்தி Electron மற்றும் X Ray ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் கோளின் சுற்றுப் பாதையிலிருந்து 300000 வருடங்களுக்கு முன் பூமியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த இந்த விண்கல் Carbonaceous chondrite வகையிலான விண்கல் என்று கண்டுபிடிக்கப்பட்து. 


இந்த விண்கல்லில் இரசாயன அடிப்படையில் பூமியின் தண்ணீரை ஒத்த தண்ணீர் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நிறையின் அடிப்படையில் 11 சதவீதமான நீர் Hydrated Mineralநிலையில் காணப்பட்டது. அந்த தண்ணீரில் உள்ள ஐதரசனானது Deuterium எனப்படுகின்ற ஐதரசன் வடிவத்தில் காணப்படுகின்றது. அந்த விண்கல்லில் காணப்படுகின்ற ஐதரசனுக்கும் Deuterium இற்கும் இடையிலான விகிதமானது பூமியிலுள்ள விகிதம் போன்று காணப்படுகின்றது. எனவே இது பூமியிலுள்ள தண்ணீரானது தண்ணீர் உட்பொதிந்த விண்கற்களிலிருந்து (water - rich asteroids) வந்தது என்று கருத இடமுள்ளது என்று இலண்டனிலுள்ள Natural History Museumஇன் விஞ்ஞானி Ashley King குறிப்பிடுகின்றார். 


அந்த விண்கல்லின் தூள்களிலிருந்து அமினோ அமிலம் (Amino Acids and other Organic Material)கண்டுபிடிக்கப்பட்டது. DNA போன்றவற்றுக்கான அடிப்படையே இவை. இந்த தூள்களில் உயிரினங்கள் இருக்கவில்லை.  ஆனால் உயிரினங்களின் வாழ்க்கைக்கான ஆரம்ப புள்ளி இவற்றில் மறைந்து இருக்கின்றது.

எனவே பூமியிலுள்ள தண்ணீரானது விண்வெளியிலுள்ள கற்களின் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. 


Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 

குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்




கருத்துரையிடுக

புதியது பழையவை