6.9 Magnitude அளவிலான பாரிய நில நடுக்கத்தை தொடர்ந்து தாய்வானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் தாய்வான் நேரப்படி பிற்பகல் 2.44 அளவில் தென் கிழக்கு கரையில் ஏற்பட்டது. குறித்த பிரதேசத்தில் சனிக்கிழமையும் 6.6 Magnitude அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் சுனாமி அலைகளுக்கான சாத்தியம் உள்ளதாக அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.