Hack செய்யப்பட்டதா Uber?

 


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுவது ஊபர் (Uber) நிறுவனமாகும். இதனுடைய கணினி வலையமைப்பு ஊடுருவலுக்குள்ளாகியிருப்பதாக (Hacked) அறிய முடிகின்றது.  தான் ஒரு ஊடுருவி.(Hacker)  ஊபரின் தகவல்கள் கசிந்திருப்பதை அறிவிக்கின்றேன் என்று ஊடுருவி ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். ஊபரில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தியே குறித்த ஊடுருவி தரவுகளைப் பெற்றிருப்பதாக அறிய முடிகின்றது. 

கடந்த 2016 ஆம் ஆண்டிலும் ஊபர் இவ்வாறான தகவல் கசிவை சந்தித்தது. அதன்போது உலகளாவிய ரீதியில் 57 மில்லியன் தனிநபர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 600,000 சாரதிகளின் தகவல்களும் அவற்றுள் உள்ளடங்கும். அந்த நேரத்தில் ஊபரினால் பயன்படுத்தப்பட்ட மூன்றாம் தர மேக தொழில்நுட்ப சேவையைப் (Third Party Cloud Based Service)பயன்படுத்தி இரண்டு தனிநபர்கள் இந்த தகவல்களைப் பெற்றனர். 

Tags : Uber, America, hacking, Hacker


கருத்துரையிடுக

புதியது பழையவை