மகாராணி எலிசெபத்தின் இலங்கை வருகை.


இலங்கையின் கரையோரப் பகுதிகளை கி.பி 1796 இல் பிரித்தானியர் கைப்பற்றினர். கி.பி 1815 இல் கண்டியும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து கி.பி 1815 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1948 காலப்பகுதி வரை இலங்கை முழுமையாக பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக காணப்பட்டது. 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தாலும் இலங்கையின் அரச தலைவியாக பிரித்தானிய மகாராணியே 1972 வரை காணப்பட்டார். அந்த வகையில் 1954 தொடக்கம் 1972 வரை இலங்கையின் மகாராணியாக (Queen of Ceylon) இருந்தவர் எலிசெபத். இவர் இரண்டு முறை இலங்கைக்கு  விஜயம் செய்திருக்கின்றார்.  

அந்த வகையில் எலிசெபத் மகாராணியாக முடிசூடி 5 மாதங்களின் பின் 1954 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். மகாராணியின் கணவரும் எடின்பேர்க் சீமானுமான இளவரசர் பிலிப்பும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தார். பத்து நாட்கள் கொண்டதாக இந்த விஜயம் அமைந்திருந்தது. இலங்கையின் இரண்டாவது பாராளுவமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை மகாராணி இந்த விஜயத்தின் போது ஆரம்பித்து வைத்ததோடு கண்டி, அநுராதபுரம்,பொலன்னறுவை , நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு ரயில் வழி பிரயாணத்தினையும் மேற்கொண்டார்.

கண்டியின் அப்போதைய மேயர் ஈ.எல் சேனநாயக்க வினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் கண்டி திருத்துவக் கல்லூரிக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். அதன் பிறகு கண்டியில் நடைபெற்ற மகுல் மடுவ நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

1981 ஆம் ஆண்டில் மகாராணியின் இலங்கைக்கான இரண்டாவது விஜயம் நடைபெற்றிருந்தது. இந்த விஜயத்தில் விக்டோரியா அணைக்கட்டின் நிர்மாண வேலைகளை மகாராணி மேற்பார்வை செய்தார். 

இந்த அணைக்கட்டு ஜே. ஆர். ஜெயவர்தன பிரதமராக இருந்த காலப்பகுதியில் அப்போதைய பிரித்தானிய பிரதமர் இரும்புப் பெண்மணி மார்க்கிரட் தட்சரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 









பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மரணம் 


மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜ-ன் 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்



கருத்துரையிடுக

புதியது பழையவை