பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மரணம்


CNN ஊடகத்தின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் Bernard Shaw தன்னுடைய 82 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். நிமோனியா நோயே இவரது மரணத்திற்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

CNN ஊடகத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து பணி புரிந்து வந்தார். வளைகுடா யுத்தக் காலப்பகுதியில் மிகத் தைரியமாக பக்தாதிலிருந்து கடும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் தன்னடைய ஊடகப் பணியை இவர் செய்தார். 1980இலிருந்து 2001 வரை CNNனுக்காக 21 வருடங்களை இவர் அர்ப்பணித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த மிக முக்கியமான கறுப்பின ஊடகவியலாளராகவும் இவர் விளங்குகின்றார். CNN நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 1980 இல் Network TV யிலிருந்து விலகினார்.









CNN, Bernard Shaw

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜ-ன் 2022 உலக நிகழ்வுகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை