Windows 11 tips and tricks 2025 Tamil

 


உலகில் அதிகமானோர் பயன்படுத்துகின்ற இயங்கு தளம் தான் விண்டோஸ் 11. இந்த இயங்கு தளத்தில் காணப்படுகின்ற முக்கியமான சில Tricks கள் சிலவற்றை Windows 11 tips and tricks 2025 Tamil என்ற இந்தப் பதிவு விளக்குகின்றது. 

01) Old Right Click Menu 

அந்த வகையில் முதலாவது நாம் இதற்கு முன்னர் பயன்படுத்திய விண்டோஸ் இயங்கு தளங்களில் காணப்பட்ட Right Click மெனுவானது தற்பொழுது மாற்றப்பட்டு புதிய வடிவத்தில் காணப்படுகின்றது. இருந்தாலும் அதனுடைய பழைய வடிவத்தை காண்பதற்கு புதிய மெனுவில் Show more option என்பதை கிளிக் செய்வதன் மூலமாக அந்த பழைய Right Click Menu வடிவத்திற்கு நாம் மீண்டும் செல்ல முடியும்.




02) Use Multiple Desktops

விண்டோஸ் 11 ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட Desktopகளை வசதிளிக்கின்றது. இந்த வசதியை செயற்படுத்துவதற்கு Settings > Personalization > Task View > On எனும் வழியை பயன்படுத்த வேண்டும்..அவற்றிற்கிடையில் மாறுவதற்கு டாஸ்க் பாரில் காணப்படும்


இந்த குறியீட்டை கிளிக் செய்வதன் மூலமாக மாற்றிக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதற்கு இந்த முறை மிகுந்த பிரயோசனமானதாக காணப்படுகின்றது.


03) Snap Layout

ஒன்றுக்கு மேற்பட்ட.விண்டோக்களை பக்கத்து பக்கத்தில் வைத்து. ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கு இந்த முறையை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.தேவையான Windowகளை Desktop மேல் பகுதியில் (Top Side) கொண்டு செல்லும் போது வடிவமைப்பு மாதிரிகள் தோன்றும். அந்த வடிவமைப்புகளில் எமக்கு பொருத்தமான வடிவமைப்பினை தெரிவு செய்து Windowகளை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

 

04) Move the Start Button Back to the Left Corner

முன்னைய விண்டோஸ் பதிப்புகளில் Start Button  ஆனது Task Bar இல்  இடது பக்க கீழ் மூலையில் காணப்படும். ஆனால் விண்டோஸ் 11 ல் Start Button ஆனது Task Bar இன் நடுவில் காணப்படும். இது பழைய முறையை பயன்படுத்தியவர்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே நீங்கள் முன்னைய விண்டோஸ் பதிப்புகளில் Start Button இடது பக்க கீழ் மூலையில் பயன்படுத்தியது போன்றே விண்டோஸ் 11 இலும் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கு வசதிகள் காணப்படுகின்றன. அந்த வகையில் Settings > Personalization > Taskbar > Taskbar Alignment > Left எனும் வழிமுறையை பயன்படுத்தி நாம் Start Button மீண்டும் இடது பக்க மூலைக்கு கொண்டு செல்ல முடியும்


05) Emoji Picker

Emojis மூலமாக நாம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.எங்களுடைய ஆவணங்களில் Emojisகளை சேர்த்துக்கொள்வதற்கு நாம் Windows Key + . (Dot) என்னும் குறுக்கு வழியை பயன்படுத்தி தோன்றும் விண்டோவில் எமக்கு தேவையான Emojis களை தெரிவு செய்து எங்கள் ஆவணங்களில் சேர்த்துக் கொள்ள முடியும்.



06) Dark Mode

நீண்ட நேரமாக கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் அசௌகரியம் ஏற்படும். இதனைத் தவிர்ந்து கொள்வதற்கு Dark Mode ஐப் பயன்படுத்த முடியும். Windows 11 இல் இந்த வசதியைப் பெற Settings > Personalization > Colors > Choose Your Mode > Dark என்ற வழிமுறையைப் பயன்படுத்தி இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். 


07) Multiple Tabs in File Explorer

Fileகள் அல்லது Folderகளை திறப்பதற்கு File Explorerஐப் பயன்படுத்துவோம். Windows 11 ஆனது இதில் வித்தியாசமான அம்சத்தைத் தருகின்றது. Windows 11 இல் Tab வசதியைத் தருகின்றது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Folderகளை நாம் திறந்து பணியாற்ற வேண்டும். Fil Explorerஇல் ஒரு Folderஐ வலது க்ளிக் செய்து வரும் மெனுவில் Open in New Tabஎன்பதை தெரிவு செய்ய வேண்டும். 



08) Customize Quick Setting Panel

இது Task Bar இல் வலது பக்க மூலையில் காணப்படுகின்றது. அதனை Click செய்து அதிலுள்ள விடயங்களை பயன்படுத்த முடியும் (Wifi, Sound, Battery,Air Plane Mode, Bluetooth, Accesibility, Live caption, Cast) . Scroll button பாவித்தும் பயன்படுத்த முடியும். தேவையானவற்றை Drag and Drop முறையில் இடம் மாற்றிக் கொள்ளவும் முடியும்.


09) Widgets

Taskbar மூலமாக Widgets இனை நாம் பயன்படுத்த முடியும். காலநிலை, நாட்காட்டி, செய்திகள், விளையாட்டு (Games) போன்றவற்றை இதன் மூலம் நாம் பயன்படுத்த முடியும். 

10. Connect your phone to Windows 11

Phone Link மென்பொருளைப் பயன்படுத்தி எமது தொலைபேசியையும் கணினியையும் Connect செய்து கொள்ள முடியும். செய்திகளைப் பார்வையிடல் (Messages), அழைப்பை மேற்கொள்ளல் (Call), தொலைபேசியில் நாம் எடுத்த புகைப்படங்களைப் பார்வையிடல், தொலைபேசியிலுள்ள இசையைக் கேட்டல், Phone Notification ஐப் பார்வையிடல் போன்றவற்றை நாம் மேற்கொள்ள முடியும். Phone Link ஆனது Start Menu வில் காணப்படுகின்றது. 

Windows 11 tips and tricks 2025 Tamil என்ற இந்தப் பதிவு மூலமாக Windows 11 இயங்கு தளத்தில் காணப்படும் முக்கிய சில விடயங்களை இங்கு பகிர்ந்துள்ளோம். Windows 11 இல் இன்னும் பல பிரயோசனமான விடயங்கள் காணப்படுகின்றன. அவை எதிர்காலத்தில் பகிரப்படும்.

U.L. அஹமத் றஸ்மி, ஏறாவூர் , இலங்கை
www.ulahavalam.com


கருத்துரையிடுக

புதியது பழையவை